Load Image
Advertisement

காங்.,கை ஆட்சியில் அமர்த்திய 5 வாக்குறுதிகள்

5 promises made by Congress   காங்.,கை ஆட்சியில் அமர்த்திய 5 வாக்குறுதிகள்
ADVERTISEMENT


பெங்களூரு: பா.ஜ., அரசு மீதான மக்கள் எதிர்ப்பு அலையுடன், ஐந்து கவர்ச்சிகரமான வாக்குறுதிகளும், கர்நாடகாவில் காங்கிரசுக்கு அபார வெற்றியை பெற்று தந்துள்ளன.

கர்நாடகாவில், ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 2019ல் கவிழ்ந்த பின், பா.ஜ., ஆட்சி அமைந்தது. ஆனால், ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்று காங்கிரசார் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர்.

மாணவர்களுக்கு வழங்கக் கூடிய முட்டை வாங்கியதில் ஊழல்; கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் வாங்கியதில் ஊழல்; எஸ்.ஐ., தேர்வு முறைகேடு; 40 சதவீதம் கமிஷன் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக, காங்கிரசார் சட்டசபையிலேயே போராட்டம் நடத்தி, மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

இலவச திட்டங்கள்இவை எல்லாம் காங்கிரசின் வெற்றிக்கு காரணமாக இருந்தாலும், கவர்ச்சிகரமான இலவச வாக்குறுதிகளும், அக்கட்சிக்கு வெற்றியை தேடி தந்துள்ளன.

Latest Tamil News
ஒவ்வொரு வீட்டுக்கும் மாதந்தோறும் தலா, 200 யூனிட் இலவச மின்சாரம்; குடும்ப தலைவியருக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் ஊக்கத்தொகை; பி.பி.எல்., ரேஷன் அட்டை குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி.

வேலை இல்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் தலா, 3,000 ரூபாய் மற்றும் டிப்ளமா படித்தவர்களுக்கு தலா, 1,500 ரூபாய் ஊக்கத்தொகை; அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் ஆகிய ஐந்து வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்தது.

அதுவும் ஒரே நேரத்தில் அனைத்து வாக்குறுதிகளையும் அறிவிக்காமல், 15 நாட்களுக்கு ஒருமுறை அறிவித்து, மக்கள் மனதில் பதியும்படி செய்தனர்.

உத்தரவாத அட்டை'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த திட்டங்கள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் சிவகுமார் ஆகியோர் கையொப்பம் இட்ட உத்தரவாத அட்டைகளை வீடு வீடாக சென்று வழங்கினர்.

இது, ஏழை, நடுத்தர மக்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, வெற்றிக்கு அடித்தளம் இட்டது.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோவாசகர் கருத்து (29)

 • Gnanam - Nagercoil,இந்தியா

  மக்கள் இன்னும் இலவசங்களை நம்புகிறார்கள். ஒருபுறம் இலவசங்களை வழங்கினாலும், மறுபுறம் மக்களிடமே வசூல்வேட்டையும் செய்துதானே ஆகவேண்டும். அரசாங்கத்தை நன்முறையில் நடத்தவும், நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்லவும் எங்கிருந்து பணம் வரும்? ஒன்று கடன் வாங்கவேண்டும், அல்லது கொள்ளையடிக்கவேண்டும். மக்களுக்கு இன்னும் நல்ல படிப்பறிவுதான் வரவேண்டும். வாழ்த்துக்கள்.

 • தமிழ் -

  பிஜேபி உட்பட எந்தக்கட்சியும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எஸ்பிரி தேதி கொடுப்பதில்லை.

 • ஆரூர் ரங் -

  ஆனா எந்த வாக்குறுதிக்கும் தேதி போடவில்லை😊 எனவே 5 ஆண்டுகளில் ஜாலி பண்ணிவிட்டு போய்விடுவார்கள்.

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  டி கே சிவகுமாரின் சொத்து மதிப்பு ரூபாய் ஆயிரத்து நானூறு கோடி ..........

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  இந்த இலவசங்கள் எப்போதுதான் ஒழியுமோ? கடை தேங்காயை எடுத்து உடைக்கிறார்கள். வரி செலுத்துபவன் வயிறு எரியாதா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்