சென்னை: தமிழகம் முழுதும் பா.ஜ.,வை பலப்படுத்த, 10 மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொன்றுக்கும் மக்களிடம் செல்வாக்கு பெற்ற உள்ளூர் நபர்களை பொறுப்பாளராக நியமிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக , 66 மாவட்டங்களாகவும்; ஏழு - எட்டு மாவட்டங்களுக்கு ஒன்று என, எட்டு பெருங்கோட்டங்களாகவும் செயல்படுகிறது.
மாவட்டங்கள் தலைவரின் கீழும்; பெருங்கோட்டங்கள், பொறுப்பாளரின் கீழும் நிர்வாகம் செய்யப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் அண்ணாமலை இறங்கியுள்ளார்.
மாவட்ட பார்வையாளராகவும், பெருங்கோட்ட பொறுப்பாளராகவும் வெளிநபர்களை நியமிப்பதால், உள்ளூர் கள நிலவரம் குறித்து அவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் கட்சி வளர்ச்சி பணிகள் முழுவீச்சில் நடப்பதில்லை.
எனவே, தமிழகத்தில் உள்ள , 38 மாவட்டங்களையும், மூன்று - நான்கு மாவட்டங்கள் ஒரு மண்டலம் என பிரித்து, ஒவ்வொன்றுக்கும் ஒரு பொறுப்பாளரை நியமிக்க, மாநில தலைமை முடிவு செய்துள்ளது.
அவர், அந்த மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் நன்கு அறிந்திருப்பதுடன், அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு நன்கு அறிமுகமானவராகவும் இருக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள், பெண்களிடம் செல்வாக்கு உள்ள நபர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், சினிமா, விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கட்சியில் சேர்க்கும் பணியிலும் பா.ஜ., தீவிரம் காட்டியுள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து (37)
சிங்கப்பூர் இல் இருந்து ஒருத்தன் கமெண்ட் போடுவானை, ஆளை காணோம்
கர்நாடகாவில் அறுத்து தள்ளியாச்சு, இனி தமிழ் நாட்டில். சீக்கிரம் வா, எங்களுக்கு என்டேர்டைன்மெண்ட் வேணும். நீ இல்லாமல் ரொம்ப போர்.
அண்ணாமலையை பிஜேபியின் தலைமை தேர்தல் பொறுப்பாளர் ஆக நியமனம் செய்ய அணைத்து மாநில எதிர் கட்சிகள் கோரிக்கை
தமிழகத்துக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்ட 9000 கோடிகள் ஒதுக்க காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ..இதை சொல்லித்தான் கர்நாடகாவில் ஜெயிச்சானுங்க ...இங்குள்ள திராவிடனுக்கு இதுதான் கர்நாடக திராவிட மாடலாம் ....தமிழ் தமிழன் தமிழன்டா
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை பப்பு என்று சொல்வார்கள், ஆனால் உண்மையிலேயே அண்ணாமலை அவர்கள் தான் பப்பு பட்டத்துக்கு பொருத்தமானவர்!