Load Image
Advertisement

34 ஆண்டு கர்நாடக அரசியல் வரலாற்றில் புதிய மாற்றம்

பெங்களூரு: நடந்து முடிந்துள்ள கர்நாடகா சட்டசபை தேர்தல் 34 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Latest Tamil News

கர்நாடக மாநிலத்தில் , தேர்தலை சந்திக்கும் எந்த ஒரு அரசியல் கட்சியும் தொடர்ந்து மறுபடியும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது இல்லை. இது ஒருபுறம் இருப்பினும் கடந்த 34 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ,நடந்து முடிந்துள்ள தேர்தல் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 1989 ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 178 தொகுதிகளில் வெற்றி பெற்றது . இதன் வெற்றி சதவீகிதம் 43.76 ஆகும். 1994-ல் வெற்றி பெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 115 இடங்களை பெற்றது. இது 33.54 சதவீதமாகும்.1999-ல் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய காங்.,132 இடங்களை பெற்றது. இதன் வெற்றி சதவீதம் 40.84 ஆகும்.2004 -ல் தனி கட்சியாக பா.ஜ.,78 இடங்களை பிடித்தது. இதன் வாக்கு சதவீதம் 28.33 ஆகும்.

2008-ல் மீண்டும் தனி கட்சியாக பா.ஜ., 110 இடங்களை பிடித்தது. இன் வாக்கு சதவீதம் 33.86 ஆகும். 2013-ல் காங்கிரஸ்122 இடங்களை பிடித்து ஆட்சியை பிடித்தது . இதன் வாக்குவிகிதம் 36.6 ஆகும். சித்தராமையா முதல்வரானார். தொடர்ந்து 2018-ல் பா.ஜ., 104 இடங்களை பிடித்தது. இதன் சதவீதம் 36.3 ஆகும். தற்போது 2023 ல் நடந்து முடிந்துள்ள தேர்தலில் காங்கிரஸ் 136 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் சதவீதம் 42.9 ஆகும்.
Latest Tamil News
இதன்படி கடந்த 34 ஆண்டுகளில் எந்த ஒரு கட்சியும் தனிப்பட்ட முறையில் 130 இடங்களுக்கு மேல் பெறாமல் இருந்தது. மேலும் வாக்குவிகிதமும் குறிப்பிட்ட சதவீததிற்கு மேல் பெறாமல் இருந்து வந்தது. தற்போது ஆட்சி அமைக்க உள்ள கட்சியானது தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீத எண்ணிக்கை ஆகியவற்றில் புதிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


வாசகர் கருத்து (24)

  • Raj - Chennai,இந்தியா

    ஒன்றும் புரியவில்லை.... மக்கள் கொடுத்த தீர்ப்பு... பொறுத்திருந்து பார்க்கலாம்......

  • raja - Cotonou,பெனின்

    இதோ வந்துட்டானே தமிழன் என்கிற போர்வையில் இந்த விசு அய்யர் என்று பெயர் வைத்து கொண்டு கருத்து வாந்தி எடுத்த மூர்க சகோதரன்...

  • BALU - HOSUR,இந்தியா

    பிச்சைக்காரர்களாக பழக்கப்படுத்தப் பட்டுவிட்ட நாங்கள் எங்களுக்கு யார் பிச்சை அதிகமாகப் போடுகிறோம் என்று கூறியுள்ளார்களோ அவர்களுக்கே ஓட்டுப் போடுவோம்.ஏன்னா கர்நாடக மக்களும் திராவிடத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    தலைக்கனம் ,கர்வம் ,ஆணவம் மக்களால் ஒடுக்கப்பட்டது ....

  • தமிழன் - Chennai ,இந்தியா

    தண்ணீரில் மலரும் தாமரை மக்கள் கண்ணீரில் மலருமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்