ADVERTISEMENT
சென்னை: அறநிலையத்துறை அலுவலர்களுக்காக, 1.13 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட, 14 புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை, நுங்கம்பாக்கம், அறநிலையத்துறை தலைமையகத்தில் நேற்று நடந்தது.
ஹிந்து சமய அறநிலையத்துறையின், 2021 - -22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், 'துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு, 108 புதிய வாகனங்கள, எட்டு கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்தல், அசையா சொத்துக்களை கண்டறிந்து அளவீடு செய்தல், திருப்பணிகளை பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில், அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வாங்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்., மாதம் இரண்டு தவணையாக, 6.64 கோடி ரூபாய் செலவில், 88 வாகனங்கள் வாங்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, 1.13 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட,14 வாகனங்களை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன், சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், கமிஷனர் முரளீதரன், கூடுதல், இணைக் கமிஷனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து (21)
சிவன் சொத்து மட்டும் அல்ல பெருமாள் சொத்தும் இருக்கு அவர் கண்டிப்பா தவறு செஞ்சா கண்ணைக் குத்திடுவார்....
ஊரான் வீட்டு நெய்யே,என் பெண்டாட்டி கைய்யே ...
அறமற்ற துறை ....
பல இந்துக்கோயில்களில் கருவறையில் உள்ள விளக்குக்கு நல்லெண்ணெய் கூட ஊற்ற முடியாமல் வருமானம் இல்லாமல் மிகவும் பரிதாபமான சூழல் நீடிக்கிறது .இவர்களுக்கு கோயில் உண்டியல் பணத்தில் சொகுசு வாகனங்கள் இப்போது வாங்க வேண்டியது ரொம்ப அவசியமா ...???
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
மாற்று வேட்டிகள் கூட இல்லாத நிலையிலும் சுற்றுப்பட்டு நாலைந்து கோயில்களுக்கு பூஜை செய்து, தான் உண்ணும் சோற்றையே முதலில் படைத்து, தன் தலைக்கு எண்ணெய் இல்லாவிடில் கோவில் விளக்கை அணையாது பாதுகாக்க பாடுபடும் ஏழை அர்ச்சகர், குருக்களின் வயிற்றில் அடித்து, அந்தக்காசில் சொகுசுக்காராம் தெய்வம் இவர்களை கேட்காமல் எத்தனை காலம் 'நின்றுகொண்டே' இருக்குமோ?