Load Image
Advertisement

அமைச்சராக முயற்சித்த சிஷ்யன்: அதிர்ச்சியில் உறைந்த நேரு

Disciple who tried to become a minister: Nehru was shocked   அமைச்சராக முயற்சித்த சிஷ்யன்: அதிர்ச்சியில் உறைந்த நேரு
ADVERTISEMENT
சென்னை: தன்னால் எம்.எல்.ஏ. ஆக்கப்பட்ட மணச்சநல்லுார் கதிரவன் அமைச்சர் பதவிக்கு முயற்சித்த செய்தி அறிந்து தி.மு.க. முதன்மை செயலரும் அமைச்சருமான நேரு அதிர்ந்து போனதாக தெரிகிறது.

கதிரவன் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் தலைவர் சீனிவாசனின் மகன். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் நேரு பரிந்துரை அடிப்படையில் முத்தரையர் சமுதாயத்தினர் அதிகம் நிறைந்த தொகுதியில் ரெட்டியார் சமூகத்தை சேர்ந்த கதிரவனுக்கு தி.மு.க. தலைமை வாய்ப்பளித்தது. அதிக முறை அ.தி.மு.க. வென்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதியை தோற்கடித்து கதிரவன் எம்.எல்.ஏ. ஆனார்.

அதன்பின் அமைச்சர் உதயநிதி, ஸ்டாலின் மனைவி துர்காவின் சகோதரி மகனுடன் கதிரவன் மிக நெருக்கமாகி விட்டார். இதனால் குரு நேருவை மிஞ்சிய சிஷ்யனாகி விட்டார் கதிரவன். இந்நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றம் பற்றிய செய்தி ஒரு மாதமாக அடிபட துவங்கியதும் கதிரவனும் களத்தில் இறங்கியுள்ளார்.

கதிரவன் சார்ந்த ரெட்டியார் சமுதாயத்தை சேர்ந்த நேரு சாத்தூர் ராமச்சந்திரன் ஆகிய இருவர் அமைச்சர்களாக உள்ளதாலும் கதிரவன் வயதில் இளையவர் என்பதாலும் 'அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என முதல்வர் ஸ்டாலின் கூறி விட்டதாக தெரிகிறது. செய்தியைக் கேள்விப்பட்ட நேரு அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.
Latest Tamil News
நேரு ஆதரவாளர் ஒருவர் கூறுகையில் 'நேருவின் உறவினர் என்பதை பயன்படுத்தி தான் முன்பு நெப்போலியன் அரசியலுக்கு வந்தார். ஆனால் நேருவை மீறி கருணாநிதி குடும்பத்துடன் நட்பாகி மத்திய இணை அமைச்சர் வரை உயர்ந்தார்.

'நெப்போலியனால் நேருவின் தம்பி ராமஜெயத்திற்கு வர வேண்டிய எம்.பி. பதவி பறிபோனது. இப்போது நேருவால் வளர்க்கப்பட்ட கதிரவன் அவரை மீறி அமைச்சர் பதவிக்கு முயற்சிக்கிறார்' என்றார். வரும் லோக்சபா தேர்தலில் மகன் அருணை பெரம்பலூர் தொகுதியில் நிறுத்த நேரு முயற்சித்து வருகிறார். இதனால் தன் அதிரடியை காட்டாமல் அமைதியாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.


வாசகர் கருத்து (24)

  • thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ

    ....நேரு காந்தி என்று பெரும் தலைவர்களின் பெயரை வைத்துக்கொள்வது ...உண்மையான பெயர் என்னவென்று பார்த்தல் முனியாண்டி , குப்புசாமி என்றிருக்கும் ....

  • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

    ரெட்டி ன்னா அப்ப மனவாடா? ஹிஹிஹி தமிழனே தமிழனா ஆளுறான்டா திராவிட மாடல்டா🤣🤣🤣🤣

  • vinu - frankfurt,ஜெர்மனி

    இந்த நேரு ஒரு ரவுடி போல நடந்து கொள்ளுவார். ஸ்டாலின் இவரை ஒதுக்கி வைப்பதை நல்லது .

  • கண்ணன் -

    நேரு அண்ணே மகனை டில்லிக்கு அனுப்ப கோவலபுரத்துக்கு குடுக்க என்ன செலவாகும்????

  • RADE - loch ness,யுனைடெட் கிங்டம்

    அது தான் இவ்வளோ காலம் சம்பாதித்த பின்பும் வேறு யாரும் வரக்கூடாதுன்னு எதற்கு எண்ணம், சொந்த ஜாதிக்காரன் கூட வர கூடாது அவ்வளவு சுயநலம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்