Load Image
Advertisement

மீண்டும் கிங் மேக்கர்? ம.ஜ.த., சிங்கப்பூர் பறந்தார் குமாரசாமி

Again King Maker? MJD Kumaraswamy flew to Singapore  மீண்டும் கிங் மேக்கர்? ம.ஜ.த., சிங்கப்பூர் பறந்தார் குமாரசாமி
ADVERTISEMENT
பெங்களூரு 'கர்நாடக சட்டசபை தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது' என, கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளதால், ம.ஜ.த., மீண்டும், 'கிங் மேக்கர்' ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், முன்னாள் முதல்வர் குமாரசாமி திடீரென சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார்.
Latest Tamil News

கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, 224 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.

பெரும்பாலான கருத்து கணிப்புகள், 'அதிக தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் தனி பெரும் கட்சியாக உருவெடுக்கும்' என குறிப்பிட்டுள்ளன. அதே நேரம், 'ஆட்சி அமைக்க தேவைப்படும், 113 தொகுதிகளில் எந்த கட்சியும் வெல்வது கடினம்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், 2018ல் நடந்ததைப் போலவே, இம்முறையும் தொங்கு சட்டசபை தான் அமையும் என்றும்; ம.ஜ.த., ஆதரவு இன்றி, எந்தக் கட்சியும் ஆட்சி அமைப்பது கடினம் என்றும் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில், ம.ஜ.த.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, நேற்று அதிகாலை திடீரென சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். பிரசார களைப்பு காரணமாக, மருத்துவ பரிசோதனைக்காக சென்றதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

அவருடன் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி, சில நெருங்கிய அரசியல் நண்பர்களும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில், யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, அவர் அங்கேயே ஆலோசிப்பார் என தெரிகிறது. நாளை பெங்களூரு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, புதுடில்லியில் கர்நாடக மூத்த தலைவர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, தேவைப்பட்டால், 'ஆப்பரேஷன் தாமரை - 2' நடத்துவது குறித்தும், ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் ஆலோசித்ததாக தெரிய வந்துள்ளது.

இன்னொரு பக்கம், காங்., மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, புதுடில்லியில் இருந்து நேற்று அவசரமாக பெங்களூரு வந்தார்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. மதியத்துக்குள் முன்னணி நிலவரங்கள் தெரிந்து விடும் என்பதால், கர்நாடகாவில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

--புதுடில்லி நிருபர் -


வாசகர் கருத்து (9)

 • Sampath Kumar - chennai,இந்தியா

  யார் தயவும் இன்றி காங்கிரஸ் தனி பேரும் மஜுரிட்டி உடன் ஆட்சி அமைக்கும் ஆட்டுக்குட்டி அண்ணாமலை போன இடம் உருப்பகொடுத்த கர்நாடக மக்களை வாழ்த்துளின்றோம் டாது என்பதை பிஜு கரண் உன்னரவேண்டும் கிங் மேற் சிங்கப்பூர் போவதில் ரகசியம் ஒன்றும் இல்லை ஒரு கட்சில அவரே செய்க போவது இல்லை பிஜேபிக்கு மாறன் ஆதி

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  மேக்கரா ஜோக்கரா என்று நாளைக்கு தெரிந்துவிடும். பாஜகவோ அல்லது காங்கிரஸோ அறுதி பெரும்பான்மை பெற்றுவிட்டால் குமாரசாமி குடும்பத்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும்.

 • பெரிய குத்தூசி - Chennai,இந்தியா

  குமாரசாமி படத்தை பார்த்தால், நீங்கள் தமிழகத்தில் எந்த RTO ஆபீஸ் போனாலும் பத்துக்கு ஏழு RTO ஆபீஸ் ல பிரேக் இன்ஸ்பெக்டர் குமார சாமி மாதிரியே முகத்தோடு மேலே வெள்ளை சட்டை கீழே காக்கி பேண்ட் போட்டுருப்பாங்க:)

 • பெரிய குத்தூசி - Chennai,இந்தியா

  பரபரப்பான காட்சிகள் அரங்கேறாது. பிஜேபி 125 இடங்களை கைப்பற்றும்.

 • sridhar - Chennai,இந்தியா

  குழம்பிய நிலையில் மக்கள் இருந்தால் இதுபோல் பத்து எம்எல்ஏ வைத்துக்கொண்டு பல பல கோடி பேரம் பேசலாம். ஜனநாயகத்தின் சாபக்கேடு .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement