கரூர் அப்பிபாளையம் சிவசுவாமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வழிபட சென்றேன். போகர் சன்னதியில் தரிசனத்திற்கு சென்றேன். அங்கு வண்ணம் பூசும் பணி நடைபெறுவதாகக் கூறி பக்தர்களை அனுமதிக்காமல் தடுத்தனர். 'நாங்கள் புலிப்பாணி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள். மே 18ல் போகர் சன்னிதியில் போகர் ஜெயந்தி கொண்டாட ஏற்பாடு செய்கிறோம்' என்றனர். பல ஆண்டுகளாக பழநி கோவிலுக்கு சென்று வருகிறேன். இதுபோன்ற விழா கொண்டாடுவது குறித்து எந்த தகவலும் இல்லை. கோவில் நிர்வாகமும் இதுபோன்ற விழா நடத்தியதில்லை. கோவில் பொதுவானது. இதில் தனிப்பட்ட யாருக்கும் உரிமை இல்லை. தனிநபர் மற்றும் குறிப்பிட்ட நபர்கள் நடத்தும் விழாக்களை தடை செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சிவசுவாமி குறிப்பிட்டார்.
அறநிலையத்துறை தரப்பு, மலைக்கோயிலில் மூலவர் முருகன் குறித்த திருவிழாக்கள் நடந்து வருகின்றன. மலைக்கோயிலுள்ள போகர் சன்னதியில் கோயிலின் சொத்துக்களான மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மன் உள்ளிட்ட விலையுயர்ந்த விக்ரகங்களை ஒப்படைத்து பூஜை செய்துவர அனுமதிக்கப்பட்டுள்ளது. கோயிலின் பழக்க வழக்கம், ஆகம விதிகளுக்கு முரணாக மலைக்கோயிலில் போகர் சன்னதியில் போகர் ஜெயந்தி நடத்த தடை விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
புலிப்பாணி ஆசிரமம் தரப்பில், 'தண்டாயுதபாணி சுவாமி சிலையை செய்தவர் சித்தர் போகர். அவரது சமாதி ஆசிரம பராமரிப்பில் உள்ளது. பல ஆண்டுகளாக போகர் ஜெயந்தி நடந்து வருகிறது. 'இதில் அறநிலையத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதற்கு முன் யாரும் இடையூறு ஏற்படுத்தவில்லை' என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: போகர் ஜெயந்தி பல ஆண்டுகளாக நடந்துள்ளது. எனவே, மே 18 காலை 11:00 முதல் மதியம் 2:00 மணிவரை மண்டபம், போகர் சன்னிதியில் அவரது ஜெயந்தி விழா, மரகத லிங்கத்திற்கு அபிஷேகம், புவனேஸ்வரி அம்மனுக்கு பூஜை, ஆராதனை நடத்திக் கொள்ளலாம். இவ்வாறு உத்தரவிட்டனர்.
வாசகர் கருத்து (11)
சேகர் பாபு தேவையில்லாமல் தலையைநீட்டி அவமானப்படுகிறார் தில்லை விவகாரத்தில் தீக்ஷதர்களை பழிவாங்கும் எண்ணத்தோடு ஏதாவது ஒரு துரும்பு சிக்காதா என்று ஏங்கி கிடைத்து, அவர் மூக்குடைப்பட்டார். இப்போது பழனி போகர் விஷயத்திலும் தேவையில்லாமல் தலையை விட்டு மொட்டை அடித்துக்கொண்டார். இனியாவது கொடுத்த வேலைக்கு மேல் தாவ வேண்டாம் என்பது மக்களின் தாழ்மையான வேண்டுகோள்
இது தேவையில்லாத ஹிந்து அறநிலையத்துறையின் தேவையில்லாத வேலை. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் அரசு இயந்திரத்திற்கு குட்டு விழுமா?
காசு வாங்கிட்டு தானே கர்த்தரின் சீடர் விடியலுக்கு ஓட்டு போட்டீங்க, ஏதோ ஒரு 100 ஹிந்துக்கள் பொங்கிட்டா போதுமா? விடியல் சார் இந்த தபா கொஞ்சம் கூட்டி 5000 குடுங்க பாஸ், அதான் நெறய சாம்பாதிச்சுடீங்க இல்ல, ஹிந்து அடிமைகள் ஓட்டு என்றும் விடியலுக்கு தான்
அந்நிய அறநிலையத் துறை ...
விடியல் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா, இந்த பண்டிகை காலம் காலமாக நடந்து வருகிற ஒரு நிகழ்ச்சி ஆகும், இந்த விழாவை தடை செய்ய இந்த ஆட்சியாளர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. ஓஹ் இங்கு பிரியாணி கஞ்சி கிடைக்காதல்லவா. சரி தான்.