Load Image
Advertisement

முன்பை விட 10 மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம்: கெஜ்ரிவால்

We will work 10 times faster than before: Kejriwal   முன்பை விட 10 மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம்: கெஜ்ரிவால்
ADVERTISEMENT
புதுடில்லி: நிர்வாக நடவடிக்கை எடுப்பதற்கு டில்லி அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், ‛முன்பு இருந்ததை விட இனிமேல் 10 மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம்' எனக் கூறியுள்ளார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

டில்லியில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவுகிறது. டில்லி நிர்வாக மாற்றம் தொடர்பாக மத்திய அரசு சில சட்ட திருத்தங்களை செய்தது தொடர்பான வழக்கில் இன்று (மே 11) உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‛மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே டில்லி சட்டசபைக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது. அரசுக்கு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்காவிட்டால் அரசியல் அமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும். டில்லி அரசின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ள மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது' எனக் கூறப்பட்டது.

Latest Tamil News
இது தொடர்பாக அமைச்சரவையை கூட்டிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டில்லி மக்களின் பணியைத் தடுக்கும் அதிகாரிகள் மீது வரும் நாட்களில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கைகள் கட்டப்பட்டு தண்ணீரில் நீந்த வேண்டும் என்ற நிலையில் இருந்தேன். நீந்த முடியாவிட்டாலும், என்னால் மிதக்க முடிந்தது. எவ்வளவோ தடைகள் இருந்தபோதிலும், நாங்கள் டில்லியில் சிறப்பாகப் பணியாற்றினோம்.

எனது போராட்டம் முழுவதிற்கும் எனக்கு ஆதரவளித்ததற்காக டில்லி மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முன்பு இருந்ததை விட இனிமேல் 10 மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம். நாங்கள் கல்வியின் முன்மாதிரியை நாட்டிற்கு எடுத்து காட்டினோம். டில்லி இப்போது முழு நாட்டிற்கும் திறமையான நிர்வாகத்தின் மாதிரியை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (22)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    பாத்து ,ரொம்ப ஜாக்கிரதையாப் போங்க ,போகிற வேகத்துல மோதிக் கவுந்துடாதீங்க ..

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்தியாவில் மக்களை நன்கு ஏமாற்றுவதில் சூப்பர் சோனிக் வேகமா ..???கீப் இட் அப் ..

  • Balasubramanyan - Chennai,இந்தியா

    This fellow and his fellow men will loot everything and nobody can question. I ask the Supreme Court whether this judgment on full right for elected govt and governor and LG must be puppets is hold good for appointing judges by elected central govt. Why this partiality.

  • R Kay - Chennai,இந்தியா

    அப்போது இனி 450 கோடி பங்களாவா? Keep it up புகுந்து விளையாடுங்கள்.

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    இனிமேல் அதிகம் திருவார்களா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்