புதுடில்லி யூனியன் பிரதேசத்தில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட நிர்வாக அதிகாரம் தொடர்பாக, யூனியன் பிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பிரச்னை உள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:
புதுடில்லி யூனியன் பிரதேசம் ஒரு தனித்துவமானது. மத்திய அரசுக்கே அதிக அதிகாரம் வழங்குவது என்பது, அரசியல் சாசன நடைமுறைக்கு எதிரானதாகும். மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைப் போல, புதுடில்லியிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. நம் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், அரசு நிர்வாகம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே இருக்க வேண்டும்.
அதிகாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் உத்தரவுகளை அவர்கள் எப்படி செயல்படுத்துவர்? அதனால், பொது ஒழுங்கு, போலீஸ், நிலம் தவிர்த்து, மற்ற அனைத்து நிர்வாக அதிகாரங்களும் புதுடில்லி அரசுக்கே இருக்க வேண்டும். நிர்வாகம் தொடர்பாக சட்டசபை மற்றும் புதுடில்லி அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்படியே, துணை நிலை கவர்னர் செயல்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (47)
இனி மாநில அரசுகள் புகுந்து விளையாடலாம். கவர்னர் என்ற கட்டுப்பாட்டாளர் இந்த தீர்ப்பினால் டம்மியாக்கப்பட்டிருக்கிறார். வசூல் செய்து தராத, வளைந்து கொடுக்காத அதிகாரிகள் இனி inefficient என்று குற்றம் சாட்டப்பட்டு தூக்கியடிக்கப்படுவார்கள்.
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு அதிகாரம் என்றால்,மத்திய அரசு என்ன மண்ணாங்கட்டியால் தேர்தெடுக்கப்பட்டார்களா? மத்திய அரசு கொலிஜியம் முறையை நீக்கி சட்டம் போட்டால் இவர் அதை நிராகரிக்கிறார். ஒரு கீழ் கோர்ட் தீர்ப்பை உயர் நீதி மன்றம் மறுக்கிறது.உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கிறது. சட்டம் ஒரு ஓட்டை.யார் எப்படி பார்க்கிறார்களோ அப்படி சரியாக இருக்கிறது. இதில் யார் சொல்வது சரி? ஒரு ஆள் மேல் பத்து கொலை,இருபது ஆள் கடத்தல்,முப்பது கற்பழிப்பு இருந்தாலும் அவன் ஜாமீனில் வெளியே திரிகிறான். மோசடி வழக்கில் வக்கீலின் வாத திறமையினால் சாகும் வரை தண்டனை கிடையாது. இந்த மாதிரி நூறு வருடங்கள் கேஸை நடத்துவார்கள். நீதியாவது மக்களுக்காவது.கிடைப்பதாவது. ஆண்டவனாக பார்த்து செய்தால்தான் உண்டு.
ஜல்லிக்கட்டு. நீட், மணிப்பூர் சம்பவங்கள் மூலம் புரிந்து கொள்வது.😌.சாதாரண மக்களுக்கு எது அரசு உத்தரவு. எது கோர்ட் உத்தரவு என்ற வேறுபாடே தெரிவதில்லை. 🤔 அரசின் அங்கம் தான் நீதிமன்றம் எனவும் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட இந்திய மக்கள் எப்படி ஜனநாயகத்தை புரிந்து வாக்களித்திருக்கிறார்கள்? அரசியல் நிர்ணய சபை கூட அனைத்து மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றல்ல. அது வகுத்த சட்டங்களை நாம் ஏற்கலாமா😇 கூடாதா?
ஆக நியமிக்கப்படும் நீதிபதிகளை விட. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்லிமென்ட் மற்றும் அரசுதான் மதிப்பும் அதிகாரமும் மிக்கது. நன்றி🙏🙏 நீதிபதிகளே.
வெறும் நாமினேசன் செய்யப்பட்ட கெவுனர்கள் புகுந்து வெளையாறாங்க. ஒரு கவுன்சிலர் எலக்ஷனில் கூட நின்னு ஜெயிக்க முடியாதவங்க.