ADVERTISEMENT
சென்னை: 'திமுக பைல்ஸ்' என்ற பெயரில், தி.மு.க.,வினரின் சொத்துப்பட்டியலை கடந்த ஏப்.,14ல் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பாக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தரப்பில், அரசு வழக்கறிஞர் தேவராஜன் இன்று (மே 10) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி அவதூறு தகவல்களை அண்ணாமலை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை 8 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாசகர் கருத்து (35)
உளவுத்துறை முதற்கொண்டு பல துறைகள் தீம்காவையும் அதன் நிரந்தர தலைமைக்குடும்பத்தையும் விளக்கெண்ணை ஊற்றி கவனித்து வருகிறார்கள். 200 கோடி முறைகேட்டுக்கு ஆதாரம் கண்டிப்பாக உண்டு... ஆகவே விடியலாருக்கு கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மரியாதையும் கூட காற்றில் பறக்கப்போகிறது...
திராவிட அரசின் தலைவர் வண்டவாளம் தெரிந்து விடும் .... சரியான ஆதாரம் இல்ல்லாமல் பேச அண்ணா மலை ஒன்றும் திராவிட ஆணியை புடுங்கும் ஒரு ஆள் அல்ல ..... தேசியத்தில் ஊறிய செம்மல்
பாவம் அண்ணாமலை இனி கோர்ட் படி எராவே நேரம் சரியாயிருக்கும் , அப்படியே முதல்வர் 9000 கோடி வெளிநாட்டில் முதலீடு பண்ணினார் என்று அண்ணாமலை ஏற்கனவே குற்றஞ்சாட்டி பிறகு மௌனி ஆனார். அதற்கும் ஒரு தனி வழக்கு போடுங்கண்ணா
இப்போ முரசொலி மூல பத்திரம் வேற கேப்பானுங்க, 3 வருசமா கம்முனு இருந்தவனெல்லாம் இப்போ நோண்டுவானே? 😭 😭😭🥹😪
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
தகவல் தவறானது எங்கள் சொத்து மதிப்பு மிகவும் குறைத்து மதிப்பிட்டுள்ளார்கள். லட்சம் கோடி தாண்டி.....