Load Image
Advertisement

மக்கள் முன் மட்டுமே தலைவணங்குவேன்: பிரதமர் மோடி

ஜெய்ப்பூர்: ‛‛ சதிக்கு ஒரு போதும் தலைவணங்க மாட்டேன். மக்கள் முன் மட்டுமே நான் தலைவணங்குவேன் '' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Latest Tamil News


ராஜஸ்தானில் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி இன்று(மே 10) துவக்கி வைத்தார். நவீனமயமாக்கப்பட உள்ள உதய்பூர் ரயில் நிலையத் திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாடினார். இதனால் ராஜஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடியை கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா மற்றும் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து சாலையில் இரு புறமும் பிரதமர் மோடிக்கு மலர் தூவி மக்கள் வரவேற்றனர். ராஜஸ்தான் மாநிலம் நாத்வாராவில் உள்ள ஸ்ரீ நாத்ஜி கோயிலுக்கு பிரதமர் மோடி சென்று வழிப்பாடு நடத்தினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:



இன்று 5500 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். ராஜஸ்தானில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில், எங்கள் அரசு கவனம் செலுத்துகிறது. நாட்டில் நடக்கும் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் பார்க்க முடியாத அளவுக்கு சிலர் எதிர்மறை எண்ணங்களால் நிரம்பியிருக்கிறார்கள்.

அவர்கள் சர்ச்சையை உருவாக்க மட்டுமே விரும்புகிறார்கள். வேகமான வளர்ச்சிக்கு அடிப்படை வசதிகளுடன் நவீன உள்கட்டமைப்பும் அவசியம்.போதுமான மருத்துவக் கல்லூரிகள் முன்பே கட்டப்பட்டிருந்தால், டாக்டர்கள் பற்றாக்குறையை நாம் சந்திக்க வேண்டியதில்லை.

Tamil News


ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் கிடைத்திருந்தால், 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், ‛ஜல் ஜீவன்' திட்டத்தை துவக்க வேண்டிய அவசியமில்லை. எதிர்மறையான நபர்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. அவர்கள் அரசியல் பற்றி மட்டும் சிந்திப்பார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது: எங்கள் மாநிலத்தின் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வருகிறேன், தொடர்ந்து எழுதுவேன் என்றார்.

மோதல்
பிறகு மவுண்ட் அபு பகுதியில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:கர்நாடகாவை சேர்ந்த பழங்குடியின மக்கள் சூடானில் சிக்கி தவித்த போது, அவர்களை மீட்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால், தேர்தலை மனதில் கொண்டு, காங்கிரஸ் இதனை பிரச்னை ஆக்க முயன்றது. அவர்களின் அடையாளத்தை வெளியிட்டு, பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது. அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால், அதன் மூலம் மாநிலத்தில் அதிக ஓட்டு கிடைக்கும் என நினைத்தது. ஆனால், இந்தியர்களின் பாதுகாப்பை காக்க எந்த எல்லைக்கும் மோடி செல்வார் என்பதை காங்கிரஸ் மறந்துவிட்டது. ராஜஸ்தானிலும் பழங்குடியினரை பற்றி காங்கிரஸ் கவலைப்பட்டது கிடையாது.

இங்கு என்ன மாதிரியான ஆட்சி நடக்கிறது. முதல்வரை எம்.எல்.ஏ.,க்கள் நம்ப மறுக்கின்றனர். எம்.எல்.ஏ.,க்களை முதல்வர் நம்ப மறுக்கிறார். எனக்கு எதிராக நடக்கும் சதிக்கு ஒரு போதும் தலைவணங்க மாட்டேன். நான் மக்கள் முன் மட்டுமே தலைவணங்குவேன். அவர்கள் தான் எனது ‛மாஸ்டர்கள்'. இவ்வாறு மோடி பேசினார்.







வாசகர் கருத்து (19)

  • அப்புசாமி -

    ஜி.எஸ் ராஜன்... சீக்கிரம் ஒவ்வொரு குடிமகன் தலையிலும் 15 லட்சம் கடன் ஏறும்.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    நம் நாட்டு மக்களுக்குத் தலை வணங்குவது ஒரு புறம் இருக்கட்டும் .இந்தியாவில் மக்களின் பொருளாதாரத்திற்கு என்ன வழி செய்வதாக உத்தேசம் ... ???

  • g.s,rajan - chennai ,இந்தியா

    அப்பு ,வெளிநாடுகளில் இருந்து இந்தியா கடனை வாங்கிக்கிட்டே இருந்தா அந்தப் பதினைந்து லட்சம் அம்போதான் ,யாருக்கும் சல்லிக்காசு கூடக்கிடைக்காது....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்தியாவில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிக்கிட்டு இருக்கும் போது பிரதமருக்கு கடிதம் எழுதுகிறாரா..???மிகவும் ஆச்சரியமாக உள்ளது .

  • g.s,rajan - chennai ,இந்தியா

    தலைக்கனம் இருக்கா, இல்லையா ..???

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்