Load Image
Advertisement

கோவிலில் பரிசுத்த மெய்விவாகம் அழைப்பிதழை பார்த்து ஷாக் ஆன நிர்வாகம்

The administration was shocked to see the holy wedding invitation at the temple   கோவிலில் பரிசுத்த மெய்விவாகம் அழைப்பிதழை பார்த்து ஷாக் ஆன நிர்வாகம்
ADVERTISEMENT
சென்னை : திருவட்டீஸ்வரர் கோவிலில் பரிசுத்த மெய்விவாகம் நடக்க உள்ளதாக வெளியான பத்திரிகையால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அத்திருமணத்திற்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

சென்னை, திருவல்லிக்கேணி, திருவட்டீஸ்வரர் ஆலயத்தில் வரும் ஜூன் முதல் தேதி தி.மு.க., மகளிர் அணி, வட்ட துணை செயலாளர் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, பரிசுத்த மெய்விவாகம் நடக்க உள்ளதாக பத்திரிகை ஒன்று வெளியாகி இணைய தளங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து, ஹிந்து அமைப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து கோவிலில் கிறிஸ்தவ திருமணம் நடத்தக் கூடாது என, அறிக்கை வெளியிட்டனர்.

இத்தகவல் அறிந்த கோவில் நிர்வாகத்தினர், திருமணம் நடத்த இருந்த குடும்பத்தாரை விசாரணைக்கு அழைத்து, பத்திரிகை குறித்து கேட்டனர்.

அதற்கு திருமணம் செய்து கொள்பவர்கள் ஹிந்து மதத்தவர்கள்தான் என விளக்கம் அளித்து, கடிதம் கொடுக்கப்பட்டது.

இருப்பினும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி அளிக்கும் வகையில் அந்த திருமணத்திற்கு அனுமதி மறுத்து, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவில் செயலர் அலுவலர் கங்காதேவி, திருமணம் செய்து் கொள்ளும் குடும்பத்தாருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே திருமணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. நீங்கள், வரும், ஜூன் மாதம் முதல் தேதி கோவிலில் திருமணம் செய்ய முன்பதிவு செய்துள்ளீர்கள். ஆனால், வேற்று மத முறைப்படி திருமண அழைப்பிதழ் அச்சடித்துள்ளீர்கள்.

எனவே, கோவிலில் இந்த திருமணம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும், இந்த திருமணத்திற்காக நீங்கள் செலுத்திய கட்டணம் நன்கொடையாக கருதப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (59)

  • Prabhu - Chennai ,இந்தியா

    If they are Hindus why temple is not allowing for wedding. Then they will go to church or masjid.

  • ராமசாமி - Tirunelveli ,இந்தியா

    திருமண முன்பதிவின் போதே முழு விபரங்களையும் தெரிந்து கொண்டிருந்தீர்கள் என்றால் இந்த பிரச்சினைகளைத் தவிர்த்து இருக்கலாம். பதிவுக் கட்டணத்தைத் திரும்ப தருதல் கூடாது. அப்போது தான் மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்.

  • NIRMAL - Coimbatore,இந்தியா

    இது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • Deivacigamani.V - Chennai,இந்தியா

    தயவு செய்து அவர்கல் பணத்தை திருப்பி தாருங்கள் நம் மக்கள் இதை விரும்ப மாட்டாங்க நம் கடவுளுக்கு பனம் முக்கியமல்ல நம்பிக்கை முட நம்பிக்கையால் மதம் மாறும் முட்டாள்களால் வந்த வினையாக நினைக்கிறேன் தயவு செய்து நாம் அந்த ஈசன் அடிமையாக இருப்போம் மதம் மாறும் கோழைகலே நீங்கள் இறந்ததற்காக சமம் ஓம் நமச்சிவாய

  • Gomathi - Chennai ,இந்தியா

    In many churches and even in Christian institutions they are brain washing the students and converting them to Christians.... Is this good ?????? Is any Hindu is doing like this... They says that Jesus is all and non other God is there like Jesus... Then why they are searching Hindu temple for marriage.... They can go to church itself know.... This activity is like disrespecting and teasing the Hindus.... Is any church allows to marry the Hindus inside it.... Then why we should permit Christian to marry in temple.....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement