Load Image
Advertisement

தமிழக அமைச்சரவை மாற்றம் : டி.ஆர்.பி., ராஜா சேர்ப்பு - நாசர் நீக்கம்

சென்னை : தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, டி.ஆர்.பி., ராஜா சேர்க்கப்பட்டுள்ளார். பால்வளத்துறை அமைச்சர் நாசர், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, அரசு அறிவித்துள்ளது.
Latest Tamil News

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

கடந்த, 2ம்தேதி அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், சரிவர செயல்படாத அமைச்சர்கள் சிலரின் இலாகா பறிக்கப்படும் ; புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இச்சூழலில், இன்று (மே.,9)ம்தேதி, அமைச்சரவை மாற்றம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் அளித்த அறிக்கையை ஏற்பதாக, கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.

இதன்படி, மன்னார்குடி எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.,ராஜாவுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது ; அவர், வரும் 11ம் தேதி பதவியேற்க உள்ளார்.

இவர், 2011ம் ஆண்டு முதல் மன்னார்குடி எம்.எல்.ஏ., வாக இருந்து வருகிறார்.

அதேபோல், பால்வளத்துறை அமைச்சர் நாசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் ; மனோ தங்கராஜ், பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Latest Tamil News
இதன் வாயிலாக, டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த, எம்.எல்.ஏ., ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவரை தொடர்ந்து, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உட்பட, முக்கிய அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.




வாசகர் கருத்து (13)

  • s sambath kumar - chennai,இந்தியா

    இது ஜஸ்ட் ட்ரைலர் தான். ஒரு ...... வெளியே, மற்றோன்று உள்ளே. இனிமேதான் மெயின் பிக்சர் வரும் பாருங்க.ஜெகஜால கில்லாடிங்க அப்பனும் மவனும்.

  • A.N.Mani - Chennai,இந்தியா

    மாற்றப்படவேண்டிய துச்சாதனன், கோல்ட் ஹேர் என்ன ஆனார்கள்?

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

    30000 கோடி விஷயம் என்ன ஆச்சு. மத்திய அரசு ஏன் இப்படி குறட்டை விட்டு தூங்குது?

  • Bhakt - Chennai,இந்தியா

    நைனா ஊழலில் சேர்த்து வைத்தது பத்தலயா

  • Vijay - Chennai,இந்தியா

    தமிழ்நாடு நாசம் ஆனாலும் பரவாயில்லை என்று தங்கள் மதத்தை மட்டுமே முன்னிறுத்தி திமுகவுக்கு ஒட்டு போடும் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்கள், தங்கள் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று திமுகவுக்கு ஒட்டு போடும் அரசு ஊழியர்கள், மற்றும் எவ்வளவு அசிங்கப்பட்டாலும் சூடு சுரணை இல்லாமல் திமுகவுக்கு ஓட்டு போடும் மானம் கெட்ட ஹிந்துக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement