தமிழகத்தில் சென்னை, மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் சோதனை நடத்தினர். பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பல நபர்களின் வீடுகளில் ரெய்டு நடந்தது. தடை செய்யப்பட்ட 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்புடன் தொடர்பில் உள்ளார்களா எனவும் விசாரணை நடந்து வருகிறது.
சென்னையில், ஓட்டேரி, திருவெற்றியூரில் சோதனை நடந்தது. மதுரையில் நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் பகுதியில் சோதனை நடந்தது. மேலும் இந்தியாவில் காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.
தேனியில்...
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பமெட்டு சாலை பகுதியில் வசிக்கும், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் சாதிக் அலி(39) வீட்டில் காலை 4: 30 மணிக்கு என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். என்ஐஏ இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையிலான அதிகாரிகள், வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதனையறிந்த உறவினர்கள், கட்சியினர் உள்ளிட்டோர், அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சோதனை முடிந்து 8 மணியளவில் சாதிக் அலியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றனர். சோதனையை முன்னிட்டு அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பழநி
திண்டுக்கல் மாவட்டம் பழநி திருநகரை சேர்ந்தவர் முகமது கைசர்(50). தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல தலைவராக உள்ள இவர், பழநியில் டீக்கடை நடத்தி வருகிறார். இன்று இவரது வீட்டில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், அவரை கைது செய்து அழைத்து சென்றனர். ஏற்கனவே, கோவை மற்றும் கர்நாடகாவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் இவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
மதுரையில் முகமது அப்பாஸ் என்பவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளில் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
வாசகர் கருத்து (26)
பத்தல பத்தல, ரெயிடும் பத்தல, அரெஸ்டும் பத்தல, என்.ஐ.ஏ, என்னையா வேலை பாக்குறீங்க. பத்து இடத்துல ரெயிடு நடத்தி வெறும் அஞ்சு பேத்ததான் தூக்குனீங்களா, மத்தவிங்க ஓடிட்டாய்ங்களா. ஒரு அம்பது பேத்த தூக்கினு போயி வச்சி நொங்கெடுக்குறோம்னு இருக்க வேணாம். ஆமாம் வழக்கமா இதுக்கெல்லாம் ஒப்பாரி வைக்குற இந்த கட்டுமரக்கம்பெனிதான் கொள்ளை சமாச்சாரத்துல சிக்கி நாய்ப்படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறது, அது வீசும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் சத்தத்தையே பெருசா காணோம்.
முஸ்லிம்கள் அவர்களின் சித்தாந்தத்தில் எப்படி ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு புதிய திரைப்படம் வெளியான அன்றே திருட்டு தனமாக பதிவேற்றம் செய்யும் tamilgun மற்றும் தமிழ்ராக்கர்ஸ் போன்ற இனைய தளங்கள் கூட இதுவரை தி கேரளா ஸ்டோரி படத்தை தமிழ் அல்லது ஹிந்தி மொழி பதிப்பை பதிவேற்றம் செய்யாமல் இருக்கிறது. இதை பார்த்தல் ஒரு விஷயம் நன்கு புரிகிறது, திருட்டு தனமாக புதிய தமிழ் திரைப்படங்களை படம் வெளியான அன்றே பதிவேற்றம் செய்யும் tamilgun மற்றும் தமிழ்ராக்கர்ஸ் இனைய தளங்களை இயக்குபவர்கள் கண்டிப்பாக முஸ்லீம் நபர்களாக தான் இருக்க வாய்ப்பு உள்ளது.
தீவிரவாதிகளை, டில்லி திகார் சிறையில் அடைத்தால், தில்லு தாஜ்புரியா வரிசையில் சக கைதிகளே தமிழக போலீசார் முன்னிலையில் நன்கு கவனித்துக்கொள்வார்கள். போலீசார், தூக்கிவர பெட்சீட் மட்டும் எடுத்து சென்றால் போதும்.
திராவிட மாடல் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான் கஞ்சி மற்றும் பிரியாணிக்கு அடிமையானவங்களாச்சே ...
இந்த அமைதி மார்க்கத்தின் நாட்டின் உள்ளேயே இருந்து நாட்டிற்ற்க்கு எதிராகவே சிந்தனை செய்கிறார்கள். இவர்களில் நல்லவர்கள் குறைவு.