சென்னை: பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 08) அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதில் மாணவர்களை விட 4.93 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் (97.85 சதவீதம்) முதலிடத்தில் உள்ளது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணவர்களில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 94.30 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். கடந்தாண்டு 93.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்தாண்டு அதிகரித்துள்ளது. தற்போது தேர்ச்சி பெற்றவர்களில் மாணவிகள் 96.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 91.45 பேரும் உள்ளனர். அதாவது, மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் பேர் அதிக தேர்ச்சி பெற்றனர். புதுச்சேரியில் 92.67 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
விருதுநகர் 'டாப்'
அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் (97.85 சதவீதம்), திருப்பூர் (97.79 சதவீதம்), பெரம்பலூர் (97.59 சதவீதம்) ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. தற்போது வெளியான முடிவுகளில் தமிழகத்தில் 326 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதியும் மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 17ம் தேதியும் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்விரண்டையும் ஒரே நாளில் வெளியிடலாமா என ஆலோசித்து வருகிறோம். விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
பிளஸ் 2 'ரிசல்ட்' அரை மணி நேரம் தாமதம் ஏன் ?
இன்று காலை 9. 30 மணியளவில் வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள் அரை மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு வெளியானது. இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேட்ட போது நான் வந்து சேர்வதில் சற்று தாமதம் ஆகி விட்டது. இதற்கு வருந்துகிறேன். மாணவர்கள் எந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமாக இருப்பர் என்பது எனக்கும் தெரியும். என்றார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு துணைத்தேர்வு ஜூன் 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அந்தந்த பள்ளிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை அறிய..
www.tnresults.nic.in
www.dge.tn.gov.in
ஆகிய இணையதளங்களின் வாயிலாக, தேர்வர்கள் தங்களின் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்துக்கொள்ளலாம். மாணவர்களின் மொபைல் போன் எண்களுக்கும் குறுஞ்செய்தியாக மதிப்பெண்கள் அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (9)
50000 பேர் தமிழ்த் தேர்வை எழுதவே வர வில்லை . மீதிப் பேரில் இரண்டே😶 இரண்டு பேர் முழு மதிப்பெண். டமில் வால்க முழங்கட்டும் .
எனது மகளின் தேர்வு முடிவை தெரிந்துகொள்ள ஆர்வமுடம் முயற்சி செய்தேன். கல்வித்துறை அறிவித்த எந்த ஒரு இணைய பக்கமும் திறக்கவில்லை. பிறகு தொலைபேசி மூலம் வீட்டில் தான் கேட்டு தெரிந்துகொண்டேன். நான் எதிர் பார்த்ததை விட நல்ல மதிப்பெண்.
பாஸ் பண்ணின எல்லா குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்
100 மூணுபேர் ஏமாளிகள் மற்றவர்கள் கெட்டிக்காரர்கள். நல்ல நிறைய பேப்பரை திருத்தி நல்ல மதிப்பெண் போடுங்கள் நாடு நலம்பெறும். மற்ற மாநிலம் 73% தேர்ச்சி அறிவிக்கிறார்கள்.
முதல்வரின் பூர்வீக மாவட்டம் நிரந்தரமாக பின்தங்கியுள்ளது. இதைப்பற்றி அவருக்குக் கவலையில்லை. படித்து விட்டால் அப்புறம் கேள்வி கேட்பார்களே. சரக்கு , 500 ரூ க்கு ஓட்டுப் போட மாட்டார்களே.