கர்நாடகா சட்டசபை தேர்தல் இன்றுடன் ஓய்கிறது பிரசாரம்
பெங்களூரு-கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம், இன்று மாலை 6:00 மணியுடன் ஓய்கிறது. நாளை மறுதினம், 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை மறுதினம் 10ம் தேதி நடக்கிறது. 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. 13ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் பல கட்சி தலைவர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.
பிரதமர் மோடி நேற்று பெங்களூரு பேரணி, ஷிவமொகா, நஞ்சன்கூடு பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார்.
பெலகாவி, சிக்கபல்லாபூர், தொட்டபல்லாபூர், ஆனேக்கல் ஆகிய தொகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா; ஹரப்பனஹள்ளி, கூட்லகி தொகுதிகளில் பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா.
கமலாபுரா, கலபுரகியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே; ஆனேக்கல், புலிகேசி நகர், சிவாஜி நகரில் காங்., முன்னாள் எம்.பி., ராகுல்; மூடபிதரி, மஹாதேவபுரா, பெங்களூரு தெற்கு, சிவாஜி நகரில் காங்., தேசிய பொதுச் செயலர் பிரியங்கா; சிக்கபல்லாபூரில் ம.ஜ.த.,வின் முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள், அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஓட்டுப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்துக்கு முன் பிரசாரம் ஓய்வு பெறும். இந்த வகையில், இன்று மாலை 6:00 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
இதையடுத்து, 224 தொகுதிகளிலும் இன்று மாலை 6:-00 மணி முதல், ஓட்டுப்பதிவு நடக்கும் 10ம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொகுதியில் வாக்காளர் அல்லாதவர்கள், இன்று மாலை தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (4)
காங்கிரஸ் வெற்றி நிச்சயம்.
பாஜகவுக்காக காங்கிரசும் கூட களமிறங்கி வேலை செய்திருக்கிறார்கள்.. ஆக வெற்றி யாருக்கு என்று முன்பே தீர்மானித்ததுதான்..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
முன்பயி தீர்மானித்தது தான் வோட் மச்சினி கோல்மால் என்று தெய்ரயும்