Load Image
Advertisement

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வீடு கட்டுமான செலவு...ரூ.45 கோடி அல்ல; ரூ.171 கோடி!

Delhi Chief Minister Kejriwals house construction cost...not Rs.45 crore; 171 crores!   டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வீடு கட்டுமான செலவு...ரூ.45 கோடி அல்ல; ரூ.171 கோடி!
ADVERTISEMENT
புதுடில்லி:'புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், எளிமையான மனிதரை போல நாடகமாடுகிறார். அவரது பங்களாவை புதுப்பிக்க செலவிடப்பட்டது, 45 கோடி ரூபாய் அல்ல; 171 கோடி ரூபாய்' என, விபரங்களுடன் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, நம்பர் 6, 'பிளாக் ஸ்டாப்' சாலையிலிருக்கும், 'சிவில் லைன்ஸ்' பகுதியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ பங்களாவான, 'ஷீஷ் மஹால்' உள்ளது.

கடந்த, 2015ல் டில்லி முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து, அரவிந்த் கெஜ்ரிவால் இங்கு தான் வசித்து வருகிறார். 54 ஆயிரம் சதுர அடியில் பரந்து விரிந்த இந்த பங்களா வளாகத்துக்கு உள்ளேயே, முதல்வரின் முகாம் அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன.

கொரோனா தொற்று பரவலின் போது, இந்தப் பங்களாவை புதுப்பிக்கும் பணி நடந்தது. இதற்காக, 45 கோடி ரூபாய் ஆடம்பரமாக செலவிடப்பட்டு, அரசு பணம் வீணடிக்கப்பட்டதாக, பா.ஜ., - காங்., உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின.

பங்களா புதுப்பிப்பு பணிக்கான செலவு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, தலைமை செயலர் நரேஷ் குமாருக்கு, புதுடில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், அஜய் மாக்கன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை மிகவும் எளிமையான மனிதர் போல வெளியில் காட்டிக் கொள்கிறார். அவை அனைத்துமே நாடகம். எளிமையான வாழ்க்கையை விரும்புபவர், எதற்காக கோடிக் கோடியாக கொட்டி தன் பங்களாவை புதுப்பிக்க வேண்டும்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், புதுடில்லி முன்னாள் முதல்வருமான மறைந்த ஷீலா தீட்ஷித் தான், உண்மையிலேயே எளிமையின் மறு உருவமாக வாழ்ந்தார்.

அவர் புதுடில்லி முதல்வராக பதவி வகித்த, 15 ஆண்டுகளில், அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த அனைத்து அமைச்சர்களின் இல்லங்களுக்கும் செலவு செய்த தொகை, அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் செலவுக்கு ஈடாகாது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், மருத்துவமனை படுக்கைகளுக்காகவும், ஆக்சிஜன்களுக்காகவும், மக்கள் அல்லாடிக் கொண்டிருந்த நேரத்தில், தன் பங்களாவை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுப்பித்துள்ளார்.

இதற்காக செலவிடப்பட்டது, 45 கோடி ரூபாய் அல்ல; 171 கோடி ரூபாய். அதை விரிவாகவே விளக்குகிறேன்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ அரசு பங்களாவுக்கு அருகே, அரசு இல்லங்கள் அடங்கிய நான்கு வளாகங்கள் உள்ளன. இந்த நான்கு வளாகங்களிலும் சேர்த்து, 22 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு, டில்லி அரசு உயர் அதிகாரிகள் வசிக்கின்றனர்.

அந்த, 22 வீடுகளில், 15 வீடுகள் காலி செய்யப்பட்டன, சில வீடுகள் இடிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக, காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில், 126 கோடி ரூபாய் செலவில், 21 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் அரசு செலவில் வாங்கப்பட்டன.

அரவிந்த் கெஜ்ரிவாலின் பங்களாவை புதுப்பிக்கும் பணியின் ஒரு பகுதியாகவே, ஏற்கனவே இருந்த அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புது வீடுகள் வாங்கப்பட்டுள்ளன. எனவே, இந்த, 21 வீடுகளுக்கு ஆன, 126 கோடி ரூபாய் செலவை, கெஜ்ரிவால் பங்களாவின் புதுப்பிப்பு செலவில் சேர்க்க வேண்டும்.

புதுடில்லி அரசு நிறைவேற்றிய பட்ஜெட்டில் முதல்வரின் இல்லம் புதுப்பிக்கப்பட உள்ளதை பற்றி குறிப்பிடப்படவில்லை.

எனவே, இது சிறப்புரிமை மீறலாகவும் பார்க்கப்படுகிறது. இந்த புதுப்பித்தல் பணியில், புதுடில்லியின் பாரம்பரியம், பசுமை மற்றும், 'மாஸ்டர் பிளான்' விதிகளும் மீறப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


'பர்னிச்சர் வாங்கி தந்தேன்!'



கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி, அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு, புதுடில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சொகுசாக வாழ, ஆம் ஆத்மி அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஏற்கனவே குற்றஞ்சாட்டி, இவர் பரபரப்பை ஏற்படுத்தினார்.


இந்நிலையில், சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், முதல்வர் கெஜ்ரிவால் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளை சுமத்தி, கவர்னர் வி.கே. சக்சேனாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன் விபரம்:அரவிந்த் கெஜ்ரிவாலின் புதுப்பிக்கப்பட்ட பங்களாவில் உள்ள விலை உயர்ந்த கட்டில், மெத்தை மற்றும், 'சோபா, டைனிங் டேபிள், டிரெஸ்ஸிங் டேபிள்' உள்ளிட்டவை, என் சொந்த செலவில் வாங்கி கொடுத்தேன். இவற்றை அரவிந்த் கெஜ்ரிவாலும், முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் தேர்வு செய்து தெரிவித்தனர்.


பெரும்பாலான மரச் சாமான்கள், ஐரோப்பிய நாடான இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அவர் வீட்டில் உள்ள, 12 பேர் அமர்ந்து சாப்பிட கூடிய டைனிங் டேபிள், 45 லட்சம் ரூபாய் மதிப்பு உடையது. கெஜ்ரிவால் மற்றும் அவரது குழந்தைகளின் அறைகளில் உள்ள, 'டிரெஸ்ஸிங் டேபிள்'கள் 34 லட்சம் ரூபாய் மதிப்புடையது, முகம் பார்க்கும் கண்ணாடிகள், 18 லட்சம் ரூபாய்; 45 லட்சம் ரூபாய்க்கு சுவர் கடிகாரங்கள் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்பட்டன.

இவை அனைத்துக்குமே என் நிறுவனங்களின் பெயரில் தான் பணம் அளிக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (19)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    தினம் தினம் தினசரி பத்திரிகையை திறந்தால் இந்த கெஜ்ரி மீது அவ்வளவு ஊழல் குற்றச்சாட்டுக்கள். இருந்தும் ஒரு குற்றமும் நிரூபிக்கப்பட்டு ஒரு வழக்கிலும் ஒரு தண்டனையும் கிடைக்காமல் இப்படி சுற்றுகிறான் இந்த வால், I mean Kejrival. சட்டம் சிறு சிறு பாக்கெட் திருடர்களை உடனே தண்டிக்கும். ஆனால், பெரிய பெரிய ஊழல்வாதிகளை தண்டிக்க தயங்கும். ஏன் இந்த அவலம்?

  • DVRR - Kolkata,இந்தியா

    ஏன் இதில் என்ன தவறு???நேற்று வரை ஓட்டாண்டி???யார் அது??? திரினாமுல் காங்கிரஸ் வொர்ஸ்ட் பெங்கால் முதல்வர் மம்தாவின் அண்ணன் மகன் அபிஷேக் பானெர்ஜி இன்டெர்னெட்டில் சென்று பார்த்தால் சொத்து 2.5 லட்சம் கோடி. இப்படித்தன் ஆளுங்கட்ச்சியில் உள்ள ஒவ்வொரு பெரிசும் கொள்ளை அடிக்கின்றது. அண்ணாமலையின் விடியோ ரூ 30,000 கோடி திமுக என்று சும்மாவா வந்துச்சி???

  • mrsethuraman - Bangalore,இந்தியா

    பட்டு குஞ்சலம் கேட்கிறதா ?

  • aaruthirumalai -

    அப்பா 500 சதுர அடி கூட கட்ட முடியல இவனுங்க என்னன்னா....

  • Anand - chennai,இந்தியா

    உலக மகா திருடன் போலிருக்கு......மொதல்லே இந்த அண்ணா ஹசாரேயை மொத்தனும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement