Load Image
Advertisement

கர்நாடகாவில் வன்முறைக்கு காரணம் என்ன?: பிரியங்கா விளக்கம்

பெங்களூரு: கர்நாடகாவில் வன்முறைக்கு காரணம் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பாஜ., அரசின் 40% கமிஷன் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார்.

Latest Tamil News


கர்நாடக மாநிலம் முத்பித்ரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பேசியதாவது: கர்நாடகாவில் வன்முறைக்கு காரணம் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பாஜ., அரசின் 40% கமிஷன் . இதற்கு முன்பு கார்ப்பரேஷன் வங்கி, விஜயா வங்கி, சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி என 4 வங்கிகள் இருந்தன. இப்போது இந்த அரசாங்கத்தால் இன்று அனைவரும் ஒரே வங்கியாக இணைந்துள்ளனர். கர்நாடகாவில் பணவீக்கம் நிலவுகிறது என பாஜ., குறித்து பிரியங்கா சாடினார்.
Latest Tamil News


ஊழல் செய்த முதல்வருக்கு பாராட்டு





கர்நாடகா மாநிலம் கமலாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்., தலைவர் கார்கே பேசியதாவது: எல்லாவற்றுக்கும் 40% கமிஷன் வாங்கும் ஊழல் பாஜ., அரசின் செயல்பாட்டினை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனாலும், ஊழல் செய்த முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார் என்று பிரதமர் மோடி பாராட்டி வருகிறார். மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை முக்கிய பிரச்னையாக உள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில், நாட்டின் பிரதமரின் முன்னுரிமை என்னவாக இருக்க வேண்டும்?. இவ்வாறு கார்கே பேசினார்.




6 வயது குழந்தைக்கு தெரியும்!

கர்நாடகா மாநிலம் ஆனேகல் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது: கர்நாடகாவில் நடந்த ஊழல் 6 வயது குழந்தைக்கு தெரியும். கடந்த 3 ஆண்டுகளாக இங்கு பாஜ., அரசு உள்ளது. பிரதமர் மோடிக்கும் கர்நாடகவில் நடக்கும் ஊழல் பற்றி தெரியும். 40 சதவீத கமிஷன் மூலம் எவ்வளவு கிடைத்தது என்று சொல்லுங்கள்? பிரதமர்.

எங்கு பார்த்தாலும் மோசடிகள். எம்எல்ஏ மகன் 8 கோடியுடன் பிடிபட்டார். முதல்வர் நாற்காலியை 2500 கோடிக்கு வாங்கலாம் என்று பாஜ., எம்எல்ஏ கூறுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (11)

  • Raaj Naga -

    0 /////

  • GMM - KA,இந்தியா

    வேலையில்லா திண்டாட்டம் இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆதிக்க கொள்கையால் உருவானது. காங்கிரஸ் குடும்ப கட்டுப்பாடு முறையை அமுல் படுத்த தவறிவிட்டது. மொழி வாரி மாநில பிரிவினை, இட ஒதுக்கீடு முறையில் வழிகாட்டு இன்மை, மக்கள் தொகை பெருக்கத்திற்கு பின்பும் சிறுபான்மை அந்தஸ்து, தேவையற்ற அரசு நிர்வாக கிளைகள்... நாட்டை வறுமையில் தள்ளின. காங்கிரஸ் முழுபக்க லஞ்ச பட்டியல் வெளியீட்டிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது பிரியங்கா இன்னும் அறியவில்லை.? ஊழலை குறைக்க, தடுக்க பிரியங்கா, ராகுல் ஒரு யோசனை சொல்லுங்கள். காங்கிரஸ், திராவிடம், ஆம் ஆத்மி ஊழலில் டாக்டர் பட்டம் பெற்ற கட்சிகள்.

  • Venkateswaran V - Periyakulam,இந்தியா

    உழைக்காமல் இப்படியே சுகமா வாழ்ந்த காலம் மீண்டும் வராது

  • krishnamurthy - chennai,இந்தியா

    6 வயது அறிவு கூட இல்லாத ரஹுலுலும். பிரயங்கவும் பேசுகின்றனர். கர்நாடக மக்களே இவர்களிடம் ஏமாறாதீர்கள்

  • பேசும் தமிழன் -

    உங்கள் குடும்பமே போலி பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள் ...நாட்டு மக்கள் விழித்து கொண்டு விட்டார்கள் ....இனியும் ஏமாற தயாராக இல்லை.....உங்கள் குடும்பம் என்றைக்கு இந்தியாவை விட்டு வெளியேறி இத்தாலி போகிறதோ..... அன்று தான் இந்தியாவுக்கு நல்ல காலம் பிறக்கும் .....நாட்டை பிடித்த பீடை ஒழிந்தது என்று நாட்டு மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்