Load Image
Advertisement

சாதித்ததை விட சறுக்கியது அதிகம்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் பாய்ச்சல்

மதுரை: ''தி.மு.க., அரசு சாதித்ததை விட, இரண்டு ஆண்டுகளில் சறுக்கியது தான் அதிகம்,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது:
தி.மு.க., அரசு இரண்டு ஆண்டுகளில் சாதித்ததைவிட, சறுக்கியது தான் அதிகம். முன்னேற்றத்தை விட பின்னேற்றம் தான் அதற்கு அடையாளம். 12 மணி நேர வேலை மசோதாவிற்கு தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

Latest Tamil News


தி.மு.க., தொழிற்சங்கமே எதிர்ப்பு தெரிவித்த பின், மசோதா வாபஸ் பெறப்பட்டது. தி.மு.க., அரசு பின்வாங்கியது தான் அதிகம். கஞ்சா வேட்டை என போலீசார் பல முயற்சிகளை எடுக்கின்றனர். அதற்கு பலன் கிடைக்கவில்லை; எங்கும் கஞ்சா நிறைந்துள்ளது.
தி.மு.க., அரசு வெற்றி பெற்றது 30 சதவீதம் எனில், தோல்வியடைந்தது 70 சதவீதம்; இது தோல்வி அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (10)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    விலைவாசியை ஏற்றியது அரசுக்கு சாதனை ,மக்களுக்கு இன்று வரை ஒரே சறுக்கல்தான்,முன்னேறவே முடியல ...

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    கடந்த இரண்டு ஆண்டில் சாதனை என்று எதுவும் இல்லை. பல மத்திய அரசு திட்டங்களுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டிக்கொண்டு பெருமை தேடிக்கொண்டதுதான் பெரிய சாதனை. வேதனை.

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    சறுக்கினால்கூட நிமிர்ந்து விடலாம், காளைப்பற்றிக்கொண்டு அடிமையாய் விழுந்து, ஆட்சியை காப்பாற்ற வாயை மூடி மௌனமாக இருந்தது, ஊழலை கண்டு கொள்ளாமல் விட்டது, பல குற்ற சம்பவங்களை, பொள்ளாச்சி பாலியல், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கொடநாடு குட்டுக்கொள்ளை இவற்றை கண்டுக்காமல் விட்டது என்று பல சாதனை செய்ததல்லவா முந்தைய அரசு. வெட்கம்

  • ramesh - chennai,இந்தியா

    ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை காலில் செருப்பு போடாத உதயகுமார் .அவர் மறைவுக்கு பிறகு செருப்பு போட்டதால் வழுக்கி விழுந்து விட்டார் போல தெரிகிறது

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    உள்ளாலை எல்லாம் உள்ளே தள்ளி இருந்தால் பெரிய சாதனையாக இருந்திருக்கும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்