ADVERTISEMENT
தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆகியோர், ஜூனில் ஓய்வு பெறவுள்ளனர். அதனால், புதிய தலைமை செயலர், டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை தமிழக அரசு துவங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பால், முன்பு போல மாநில அரசுகள் தங்கள் விருப்பத்திற்கு, டி.ஜி.பி.,யை நியமிக்க முடியாத நிலை உள்ளது. மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய பட்டியலை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி.,க்கு, மாநில அரசு அனுப்பி வைக்க வேண்டும்.
அதன்படி, 10-க்கும் அதிகமான மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பட்டியலை, யு.பி.எஸ்.சி.,க்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுபோல, தலைமை செயலர் பதவிக்கும் யு.பி.எஸ்.சி.,யின் ஒப்புதல் தேவை. அதற்கான பணிகளையும் தமிழக அரசு துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
- புதுடில்லி நிருபர் -

அதிலிருந்து மூன்று பேரை தேர்வு செய்து, மாநில அரசுக்கு யு.பி.எஸ்.சி., திரும்ப அனுப்பும். அந்த மூவரிலிருந்து ஒருவரை, மாநில அரசு தேர்வு செய்ய வேண்டும். இது தான் நடைமுறை.

அதன்படி, 10-க்கும் அதிகமான மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பட்டியலை, யு.பி.எஸ்.சி.,க்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுபோல, தலைமை செயலர் பதவிக்கும் யு.பி.எஸ்.சி.,யின் ஒப்புதல் தேவை. அதற்கான பணிகளையும் தமிழக அரசு துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
- புதுடில்லி நிருபர் -
வாசகர் கருத்து (34)
விஸ்வநாதன் டிஜிபி வாய்ப்பு
ரவுடிகள் சுட்டு கொள்ள பட வேண்டும், இவர்கள் பதவியை ஏற்ற பின் எல்லாம் மாறும் என்று நினைத்தோம், ரவுடிகள் வளர்ந்து நிற்பது மிகவும் வருந்த தக்கது.
....கூட்டமாக இருக்கலாம்
நான் நேர்மையானவர்கள் என்று மதித்த இந்த இருவரும் பதவிக்காகத் தங்களை விற்றவர்கள் என்று இன்று அறிந்து மனம் வேதனை அடைகிறேன் இவர்கள் இதனைப் படிப்பார்களா என்று தெரியாது ஆனால் பேச மட்டுமே அறிந்த இந்த "கட்டப்பாக்கள்" இனி பட்டிமன்ற நடுவர்களாக அமையலாம் மனசாட்சியையே விற்று பதவி வகித்தவர்கள் அதனால் காசு பார்த்தவர்கள் இனி "பேச முடியாத உண்மைகள்" என்று புத்தகங்கள் போட்டு விற்று காசாக்கலாம் ரகுராம் ராஜன் போல ஏதேனுமொரு ஆணையத்தில் பதவி கிடைக்கும்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பத்திரிகைகள் மூலம் பிரபலமான இந்த இருவரும் த்ரவிஷங்களாக மாறியது வருந்தத்தக்கது.