Load Image
Advertisement

பணத்தை இறைத்து வாங்கப்படும் பதவி உயர்வு!

'நிலங்களை மீட்பாங்களான்னு, மக்கள் ஏக்கத்தோட காத்திருக்காங்க...'' என்றபடியே வந்தார், அந்தோணிசாமி.

''என்ன விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
Latest Tamil News

''திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில சிறப்பு பொருளாதார மண்டலத்தை, 1999ல் முதல்வரா இருந்த கருணாநிதி துவங்குனாரு... இதுவரை, அந்த சிறப்பு பொருளாதார மண்டலம் செயல்படாம முடங்கியே கிடக்குதுங்க...

''இதுக்கான பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை, தன் பொறுப்புல வச்சிருந்த தனியார் நிறுவனம், கோல்கட்டாவுல இருக்கிற ஒரு பெரிய நிறுவனத்திடம், நிலங்களை அடமானம் வச்சு, 850 கோடி ரூபாய் கடன் வாங்கிட்டு போயிடுச்சுங்க...

''தி.மு.க., ஆட்சிக்கு வந்து, வருஷம் ரெண்டாகியும் இதை கண்டுக்கலைங்க... 'கருணாநிதியின் கனவு திட்டமான பொருளாதார மண்டலத்தை செயல்படுத்தணும்... அடமானத்துல இருக்கிற நிலங்களை மீட்கணும்'னு, அந்தப் பகுதி மக்கள் சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''கட்சியில சேர்ந்தா, மகளிர் உரிமை தொகை கிடைக்கும்னு, 'கொக்கி' போடுதாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''தி.மு.க.,வுக்கு புது உறுப்பினர்களை சேர்த்துட்டு இருக்காங்கல்லா... தர்மபுரி மாவட்டம், அரூர் தி.மு.க.,வினர் தெரு தெருவா போய் உறுப்பினர் சேர்க்காவ வே...

''சில இடங்கள்ல, யாரும் கட்சியில சேர மாட்டேங்காவ... அதனால, 'நம்ம கட்சியில சேரும் பெண்களுக்கு, மகளிர் உரிமை தொகை 1,000 ரூபாய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வாங்கி தருவோம்'னு சொல்லுதாவ வே...

''இதுக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு... போட்டி போட்டு, நிறைய பெண்கள் தி.மு.க.,வுல சேர்ந்துட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''கட்டு கட்டா கரன்சிகளை குடுத்து, 'புரமோஷன்' வாங்கறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார் குப்பண்ணா.

''எந்தத் துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சென்னை தவிர, மற்ற, 20 மாநகராட்சிகள்லயும், மக்கள் தொகை அடிப்படையில, சில பணியிடங்களை புதுசா உருவாக்கினா... இதுல, சில உயர் பதவிகளுக்கு, 25 லட்சம் துவங்கி, 2 கோடி ரூபாய் வரைக்கும், 'ரேட் பிக்ஸ்' பண்ணிண்டா ஓய்...

''இதுக்காகவே, சென்னையில ஒரு குழு இருக்கு... அவாளிடம், 'கரன்சி' கட்டுகளை குடுத்துட்டு ஊர் திரும்பறதுக்குள்ள, 'ஆர்டர்' வந்துடுமாம்... சமீபத்துல, கோவை மாநகராட்சியில, 'சர்வீஸ் ரூல்ஸ்' எல்லாத்தையும் மீறி, பலருக்கு புரமோஷன் போட்டிருக்கா ஓய்...

''எல்லாருமே, தலா, 25 லட்சம் ரூபாயை வெட்டியிருக்கா... இன்னொரு ஆபீசர், 50 லட்சம் ரூபாயை, 'ரெடி' பண்ணி, புரமோஷன் கேட்டுண்டு இருக்கார் ஓய்...

''சிட்டி இன்ஜினியர் போஸ்ட், ஒன்றரை வருஷமா காலியா கிடக்கறது... அதுக்கு, 2 கோடி ரூபாய் கேக்கறதால, பலரும் தயங்கறா... இதனால, பேரூராட்சியில, 'ஒர்க்' பண்ணிண்டு இருந்த ஒரு அதிகாரிக்கு புரமோஷன் குடுத்து, சீனியாரிட்டியே இல்லாத அவருக்கு, கூடுதல் பொறுப்பா அந்தப் பதவியை குடுத்திருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''பாபு, இளங்கோவன் வர்றாங்க... சுக்கு காபி போடுங்க நாயரே...'' என்றபடி அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

''காசோலை கைக்கு வந்து சேர்றதுல சிக்கல் நீடிக்கறது ஓய்...'' என்றபடியே, 'பில்டர்' காபியை பருகினார் குப்பண்ணா.

''விஷயத்தை விபரமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''இது, நாம ஏற்கனவே பேசிய விவகாரம் தான் ஓய்... ராகுல் நடைபயணத்துல, லாரி மோதி இறந்த தொண்டர், 'யாத்திரை' கணேசன் குடும்பத்துக்கு, காங்கிரஸ் தலைமை அறிவிச்ச, 5 லட்சம் ரூபாய் உதவித்தொகை இன்னும் போய் சேரலன்னு பேசினோமோல்லியோ...

''தமிழக காங்., தலைவர் அழகிரி, 5 லட்சம் ரூபாய்க்கு, 'செக்' போட்டு, 'ரெடி'யா வச்சிருக்காராம்... அதை குடுக்கறதுல தான் சிக்கல் இருக்குங்கறா...

''ஏன்னா, கணேசனுக்கு, 'பேரன்ட்ஸ், ஒய்ப்'னு யாரும் இல்ல... ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் தான் இருக்கா... அவாளுக்கு தலைக்கு, 2.50 லட்சம் ரூபாய் பிரிச்சு குடுக்க, காங்கிரஸ் தலைமை முடிவு செஞ்சது ஓய்...

''ஆனா, அதுலயும் ஒரு பிரச்னை... காங்கிரஸ் அறக்கட்டளை விதிப்படி, வாரிசுதாரர் சான்றிதழ் இருந்தா தான், செக்கை தரணுமாம்... அதனால, 'சான்றிதழை குடுத்துட்டு, செக்கை வாங்கிண்டு போங்கோ'ன்னு அவாளிடம் சொல்லியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''மின் உற்பத்தி குறைஞ்சிட்டு வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''அனல் மின் நிலையம், காற்றாலை மற்றும் நீர் மின் நிலையம் மூலமா, நம்ம மாநிலத்துல மின் உற்பத்தி நடக்கு வே... நீலகிரி மாவட்டத்துல இருக்கிற நீர் மின் நிலையங்கள்ல, 833 மெகாவாட் உற்பத்தி செய்ய முடியும்...

''இதுக்கான செலவுன்னு பார்த்தா, 1 யூனிட் மின்சாரம் தயாரிக்க வெறும், 50 பைசா தான்வே ஆவும்... அதுவே, காற்றாலை மற்றும் அனல் மின் நிலையங்கள்ல, 1 யூனிட்டுக்கு, 10 ரூபாய் வரை செலவாகுது வே...

''தி.மு.க., அரசு பொறுப்புக்கு வந்ததுல இருந்தே, நீலகிரி நீர்மின் நிலையங்களை கண்டுக்கிறதே இல்ல... உற்பத்தி திறனும் இப்ப, 500 மெகாவாட்டா குறைஞ்சிட்டு வே...'' என்றார், அண்ணாச்சி.

''இந்த மாநகராட்சி ஊழியர்களை திருத்தவே முடியாது போலிருக்குங்க...'' என, சலித்துக் கொண்டார் அந்தோணிசாமி.

''எந்த ஊர் மாநகராட்சியை சொல்றீர்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''ஆவடி மாநகராட்சிக்கு புதிய கமிஷனரா போன வருஷம் ஜூலையில, தர்ப்பகராஜை நியமிச்சாங்க... அவர் வந்ததும், நகரமைப்பு, பொறியியல் மற்றும் சுகாதார துறையில, பெஞ்ச் தேய்ச்சிட்டு இருந்த அதிகாரிகளை மாத்தினாருங்க...
Latest Tamil News
''புதுசா வந்தவங்கள்ல, ஒரு சிலர் தவிர பலர், 'ஓபி' தான் அடிக்கிறாங்க... குறிப்பா, நகரமைப்பு துறையில போன ஜனவரி மாசம் புதுசா சேர்ந்த பெண் அதிகாரி, அடிக்கடி லீவுல போயிடுறாங்க... அதனால, 'அப்ரூவலுக்காக வர்ற பைல்கள்' மலை போல தேங்கி கிடக்குதுங்க...

''சாலை ஆக்கிரமிப்பு மற்றும் பேனர்களை அகற்ற வேண்டிய நகரமைப்பு துறை ஊழியர்கள், வசூலை வாரிக் குவிக்கிறதுல தான் கவனமா இருக்காங்க... இதனால, ஆவடி சாலைகள் முழுக்க ஆக்கிரமிப்புல சிக்கி தவிக்குதுங்க...

''ஆக்கிரமிச்சவங்களை யாரும் தட்டிக் கேட்டா, 'அதிகாரிகளுக்கு குடுக்க வேண்டியதை குடுத்தாச்சு... யாரும் எங்களை கேள்வி கேட்க முடியாது... நீ கிளம்பு, காத்து வரட்டும்'னு தெனாவெட்டா சொல்றாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.


வாசகர் கருத்து (2)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    கருணாநிதியின் கனவு திட்டத்தை நிறைவேற்ற மகன், பேரன் இவர்களே ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் அவர் உபயோகித்த பேனாவைப்போல் சிலை நிறுவ அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். எங்கோ இடறுகிறதே...?

  • g.s,rajan - chennai ,இந்தியா

    பணத்தைக் கொள்ளை அடிப்பதுதான் திராவிட மாடல் போலும் ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்