அடுத்த மாதம் டில்லியில் கவர்னர்கள் மாநாடு
ஒவ்வொரு ஆண்டும், புதுடில்லியில் கவர்னர்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். இது, ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும். இதில், அனைத்து மாநில கவர்னர்களும் பங்கேற்பர். இந்த மாநாட்டில், பிரதமர் மோடியும் பங்கேற்பார். இந்த ஆண்டுக்கான மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மாநிலத்தின் அரசியல் நிலவரம், தி.மு.க., அரசின் மோதல் போக்கு, இங்கு சட்டம் - ஒழுங்கு நிலை எப்படி மோசமாகி வருகிறது என்பது பற்றி பல விஷயங்களை குறிப்பிட இருக்கிறாராம். ஜனாதிபதி இவர்களுக்கு ஆலோசனை அளிப்பார். மாநாட்டில் இறுதியாக பிரதமரும் பேச உள்ளார்.

வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் கடைசி மாநாடு இது. திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவியேற்ற பின் நடக்க உள்ள முதல் கவர்னர்கள் மாநாட்டில், கவர்னர்கள் தங்கள் மாநிலங்களின் பிரச்னைகள், அதற்கான தீர்வு, சட்டம் - ஒழுங்கு நிலைமை என பல விஷயங்கள் பற்றி விவாதிப்பர்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மாநிலத்தின் அரசியல் நிலவரம், தி.மு.க., அரசின் மோதல் போக்கு, இங்கு சட்டம் - ஒழுங்கு நிலை எப்படி மோசமாகி வருகிறது என்பது பற்றி பல விஷயங்களை குறிப்பிட இருக்கிறாராம். ஜனாதிபதி இவர்களுக்கு ஆலோசனை அளிப்பார். மாநாட்டில் இறுதியாக பிரதமரும் பேச உள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!