Load Image
Advertisement

தேசிய அரசியலில் தி.மு.க.,

தேசிய அரசியலில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் பங்களிப்பு இருக்கும் என, தி.மு.க., தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க.,வின் மறைந்த தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை, அடுத்த மாதம் சென்னையில் கொண்டாட திட்டமிட்டு, இதில் பங்கேற்க தேசிய தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வருகிறார் ஸ்டாலின்.
Latest Tamil News
தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று, அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு முதல்வரின் அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர்.

தி.மு.க.,வின் சீனியர் எம்.பி., யான டி.ஆர்.பாலு, எதிர்க்கட்சிகளின் மாநில முதல்வர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கிஉள்ளாராம்.
இந்த விழாவிற்கு, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், லாலுவின் மகனும், பீஹாரின் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் வர வாய்ப்புள்ளது.

காங்., சார்பாக ராகுல் பங்கேற்பாரா அல்லது வேறு தலைவர்கள் வருவரா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.விழா நன்றாக நடக்க வேண்டும்; இது, எதிர்க்கட்சிகளின் சங்கமமாக இருக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறாராம்.
Latest Tamil News
வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக இந்த ஒற்றுமை தேவை என்பதால், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும், முதல்வர்களும் இந்த விழாவில் பங்கேற்கும் வகையில், ஸ்டாலின் விரிவான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகிறார்.


வாசகர் கருத்து (24)

  • krishnan - madras,இந்தியா

    dEAR SIR IF HE STARTS WITH TAMIL NO BODY KNOW HE HEMSELF ASKING QUESTION AND ANSWER BOTH

  • Senthil - Proud to be an Indian - Paramakudi,இந்தியா

    தினமலர் அப்பப்போ இந்த மாதிரி நியூஸ் போட்டு எங்களை நன்றாக சிரிக்க வைத்து , ரத்த அழுத்தத்தை நார்மலாக வைத்து கொள்ள உதவவும் .. இவரது மேடைல ஹிந்திலயயோ , ஆங்கில திலோ பேசினால் எப்படி இருக்கும் என்று நினைத்தால் - சிரிப்பை அடக்க முடியல ... நஹி நஹி

  • venugopal s -

    ஹிந்தி தெரிந்திருந்தால் தான் தேசிய அரசியலுக்கு வர முடியும் என்ற தவறான மூட நம்பிக்கையை உடைத்து திமுக தேசிய அரசியலுக்கு பெரிய அளவில் வர வேண்டும்!

  • ஆரூர் ரங் -

    ஆங்கில சானல் நிருபர் எளிதான ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட போது புரியல என்று தமிழில் பதிலளித்த புத்திசாலி நம்ம முதல்வர். தமிழே😛 தகராறு. இவர் தேசீய அரசியலில் என்ன கிழிப்பார்?

  • Kannan - Ramanathapuram,இந்தியா

    ஹிந்தி தெரியாது போடானு டிசர்ட் போடுவான்களா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்