Load Image
Advertisement

கர்நாடக தேர்தல்: காங்.கில் உள்குத்து அரசியல்

கர்நாடக சட்டசபை தேர்தல் இம்மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ., மீண்டும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்ற நிலை இருந்தது. ஆனால், காங்கிரசின் தேர்தல் அறிக்கை இந்த நிலையை மாற்றிவிட்டது என குமுறுகின்றனர், சீனியர் காங்கிரஸ் தலைவர்கள்.
Latest Tamil News


இதற்கு காரணம், பஜ்ரங் தள் என்ற ஹிந்து அமைப்பை தடை செய்வோம் என்கிற காங்.,கின் தேர்தல் அறிக்கை தான். 'ஆஞ்சநேயரை வழிபடும் பக்தர்கள், ஜெய் பஜ்ரங்பலி என சொல்வர். இப்படி சொல்வதை காங்., தடை செய்கிறது' என, பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.

இதன் பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், காங்கிரசுக்கு 100க்கும் குறைவான தொகுதிகளில் தான் வெற்றி கிடைக்கும் என சொல்லப்படுகிறது. கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக உள்ள காங்., தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தான் இதற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர் காங்கிரசார்.

இவருடன் சேர்த்து, காங்.,கிற்கு தேர்தல்வியூகம் வகுத்து தந்த சுனில் கொனகுலுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. 'இவர் தான்பஜ்ரங் தள் அமைப்பிற்கு தடை என்பதை, தேர்தல் அறிக்கையில் கடைசி நேரத்தில் சேர்த்துவிட்டார்; இது, கர்நாடக காங்., தலைவர்களுக்கே தெரியாது; தேர்தல் அறிக்கை தயாரித்த குழு தலைவர் பரமேஸ்வராவிற்கு கூட இது தெரியாது' என்கின்றனர் காங்கிரசார்.

Latest Tamil News 'ரன்தீப் சுர்ஜேவாலாவும், சுனிலும் சேர்ந்து, பா.ஜ.,விற்கு மீண்டும் வெற்றி கோப்பையை தந்து விட்டனர்' என, நொந்து போய் சொல்கின்றனர் காங்., தலைவர்கள்.'சுனிலை நம்பவே கூடாது; இவர் ஏற்கனவே பா.ஜ.,வுக்காக பணியாற்றியவர்' என குறிப்பிடும் காங்கிரசார், அவரை சந்தேகிக்கின்றனர். எது எப்படியோ, கர்நாடகாவில் 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது, பஜ்ரங் தள் விவகாரம் பா.ஜ.,விற்கு உதவியதா என்பது தெரிந்துவிடும்.


வாசகர் கருத்து (10)

  • ஆரூர் ரங் -

    நந்தவனத்தில் ஓர் ஆண்டி பாட்டு😛 நினைவுக்கு வருகிறது.

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    குமாரசாமி அண்ணா காங்கிரஸுக்கு சப்போர்ட் பண்ணி ஆட்சி அமைத்தாலும் ஆபரேஷன் எட்டி start ஆகும். DKS முதல்வர் ஆவார். சித்தா ஆளுங்க பிஜேபிக்கு போய்டுவாங்க,

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    நான்சென்ஸ், ராகுல் பிரியங்கா kharghe மூவரும் பிஜேபிக்கு வெற்றி தேடி தர தீவிர பிரச்சாரம். பாஸ் இங்க பெங்களூரு ல பிஜேபிக்கு ஓட்டு கேட்க தீயமுக ஆளுங்க கூட வந்தாங்க. முன்னாடி 40-60 சீட் ஜெயிக்கும்னு தான் நெனைச்சோம், இப்போ நிலைமை மாறிடுச்சு 80-110 வரை ஜெயிக்கும். குமாரசாமி அண்ணா தான் cm ஆவாரு

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    திரு. மோடி எவ்வளவு நேக்கா பஜ்ரங் தள் அமைப்பு தடையை மத உணர்வு தடை போல சித்தரித்துவிட்டார் ஒருவேளை இதுதான் உள்குத்து என்று சொல்கிறதோ

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    சுனிலை நம்பக்கூடாது என்னும்போது பாவக்காவை தொட்ட எவரையும் நம்பக்கூடாது என்று சொல்வது போலல்லவா இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement