Load Image
Advertisement

"விவசாயிகளின் நலனுக்கு உழைக்கும் பாஜ.,": அமித்ஷா பெருமிதம்

பெங்களூரு: விவசாயிகளின் நலனுக்காக பாஜ., உழைத்துள்ளது. மேலும், அவர்களுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது என கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில் குறிப்பிட்டார்.

Latest Tamil News

கர்நாடகாவில் வரும் மே10ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளதால், அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் பிரசாரம், பேரணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.

கர்நாடகாவில் பெலகாவியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: காங்கிரஸ் சாவர்க்கரை அவமதித்தது. ஆனால் பாஜ., மஹாராஷ்டிரா மாநிலத்தை வளர்ச்சிக்கு வழிவகை செய்து, அப்பகுதி மக்களுக்கு மரியாதை அளித்து வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதன் மூலம் ராமர் பக்தர்களின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றினார்.

Latest Tamil News
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தள் என்ற அமைப்பை தடை செய்வேன் எனக் கூறி அவமதித்துள்ளது. ராகுல் உத்தரவாதங்களில் யாருக்கும் நம்பிக்கை இல்லை. திரிபுரா, அசாம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. பி.எப்.ஐ-யை தடை செய்தது, பொதுமக்களுக்கு ரேஷன் கொடுத்தது, குடிநீர் வசதி, சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது பாஜக தான். இரட்டை எஞ்சின் அரசு மக்களின் நலனுக்காக பாடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (18)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    போலி விவசாயிகளை முன்னிறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடுவது காங்கிரஸ் கட்சி.

  • அப்புசாமி -

    என்னாது? விவசாயிகள் வருமானம் ரெட்டிப்பாயிருச்சா?சொல்லவே இல்லியே.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Yes,Exactly....

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரிச்சலுகை அறிவித்த மோடி அரசுதான், நாம் நம் டூவீலருக்கு போடும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் ரூ.33 வரியாக வசூலிக்கிறதுகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரிச்சலுகை அறிவித்த மோடி அரசுதான், நாம் நம் டூவீலருக்கு போடும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் ரூ.33 வரியாக வசூலிக்கிறது

  • nisar ahmad -

    நல்லா தெறியுமே உங்ளின் விவசாயிகளின் பாசம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடியும் எட்டிப்பார்காதவர்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்