துடைப்பம், மின் விசிறி அகற்றம் தேர்தல் ஆணையம் உத்தரவு
பெங்களூரு-'ஓட்டுப்பதிவுக்கு, 48 மணி நேரத்துக்கு முன் ஓட்டுச்சாவடிகளின், 200 மீட்டர் சுற்றளவில் மின் விசிறி, துடைப்பம் தென்பட கூடாது' என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆம் ஆத்மியின் சின்னம் துடைப்பம். சில சுயேச்சை வேட்பாளர்களுக்கு மின் விசிறி சின்னமாக கிடைத்துள்ளது.
ஓட்டுப்பதிவு நாளன்று, சின்னங்கள் வாக்காளர்களுக்கிடையே, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஓட்டுப்பதிவுக்கு, 48 மணி நேரத்துக்கு முன், ஓட்டுச்சாவடிகளின், 200 மீட்டர் சுற்றுப்பகுதிகளில், துடைப்பம் பயன்படுத்தி சுத்தம் செய்யக்கூடாது;
ஓட்டுச்சாவடிகளில் துடைப்பம் வைக்கக்கூடாது; மின் விசிறிகளை அகற்ற வேண்டும் என, ஓட்டுச்சாவடி ஊழியர்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு ஆம் ஆத்மி அதிருப்தி தெரிவித்துள்ளது.
கான் கிராஸ் சின்னமான , மனித கரங்களை , 200 மீட்டர் தூர சுற்றளவுக்குள் உபயோகிப்பது பற்றி தேர்தல் கமிஷன் என்ன சொல்லும்? ஏற்கனவே அலுவலகங்களில் உபயோகத்தில் உள்ள மின் விசிறிகளையம் அகற்ற சொல்வார்களா? இயற்கை முறைகளை பின்பற்றாமல், யந்திர கதியில் விதிகளை போடுவது முறையற்றது.