Load Image
Advertisement

போலி சான்று விவகாரம்; மின் வாரியம் அலட்சியம்

Electricity board negligence in fake certificate issue  போலி சான்று விவகாரம்; மின் வாரியம் அலட்சியம்
ADVERTISEMENT

சென்னை: மின் வாரியத்தில் சிலர் போலி சான்று கொடுத்து வேலையில் சேர்ந்திருப்பதாக, தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. அந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டப்படுகிறது.

தமிழக மின் வாரியத்தில் பல்வேறு பதவிகளில் 90 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களில் பலர் நேரடி தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டனர். இது தவிர விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டிலும், உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளன.


2010க்கு முன் வரை ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றிய பலர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். கல்வி மற்றும் விளையாட்டு சான்றிதழ்களை போலியாக கொடுத்து, சிலர் வேலைக்கு சேர்ந்திருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மின் வாரியம் அலட்சியம் காட்டுகிறது.
Latest Tamil News

இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:விளையாட்டுப் பிரிவில் பலர் போலி சான்று கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளதாக அதிக புகார்கள் வருகின்றன.

அப்படி பெறப்பட்ட புகாரை வைத்து சில அதிகாரிகள் புகார் வந்த நபர்களை மிரட்டி பணம் வசூலிப்பது;

விருப்ப ஓய்வில் செல்லுமாறு வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். உண்மையான சான்றிதழ் வழங்கியவர்கள் மீது பொய் புகார் அளித்து மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர்.

எனவே பணியாளர்கள் வழங்கிய கல்வி சான்றுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லுாரி பல்கலைகளுக்கு அனுப்பி உறுதி செய்ய வேண்டும்.

அனைவரின் கல்வி விளையாட்டு சான்றிதழ்களையும் ஆய்வு செய்வதுடன், போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்திருப்பவர்களை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

'ஸ்கோச்' விருதுநாட்டில் அரசு துறைகளில் புதுமையான திட்டங்களை, வெற்றிகரமாக செயல்படுத்தும் நிறுவனங்களை பாராட்டி, 'ஸ்கோச்' அமைப்பு விருது வழங்குகிறது.

இந்த ஆண்டில் மின் துறையில் பைபர் ஆப்டிகல் தொலைதொடர்பு வசதி ஏற்படுத்தியதற்காக தமிழக மின் வாரியத்திற்கு ஸ்கோச் அமைப்பு வெள்ளி விருது வழங்கி உள்ளது.வாசகர் கருத்து (4)

 • rasaa - atlanta,யூ.எஸ்.ஏ

  பல உயர் அதிகாரிகளே பொய் சான்றிதழ் கொடுத்து சேர்ந்தவர்கள்தான். அப்படி இருக்கும்போது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  டெல்லியில் High court நீதிபதியே போலி வயது சான்றிதழ் கொடுத்து பணிலிருந்த வரலாரை கண்ட நாடு இது.. காலையில் ஒரு கேஸில் அரசு எதிர்பார்த்த தீர்ப்பை கொடுக்கவில்லை

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  போலிகள் இருந்தால்த்தான் அவர்களை மிரட்டி வாழ்பவர்களின் வாழ்க்கை செழிக்கும். ஆகவே இது நீண்டகால அடிப்படையில் தி. மாடலில் செய்யப்படும் முதலீடாகப்பார்க்க வேண்டும்.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  அவ்வாறு போலி சான்றிதழ்களுடன் வந்தவர்களிடம் எவ்வளவு 'பெறப் பட்டதோ '?அதையெல்லாம் கிளரப்போக எத்தனை 'எலும்புக்கூடுகள் ' அவர்களின் அலமாரிகளில் இருந்து விழுமோ என்ற அச்சத்தால் கண்டும் காணாமல் இருப்பார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்