Load Image
Advertisement

ராஜினாமாவை வாபஸ் பெற்றார் சரத்பவார்: கட்சியினரின் கோரிக்கைக்கு பணிந்தார்


மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக சரத்பவார் தொடர வேண்டும் என வலியுறுத்தி அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் சரத்பவார் தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். Latest Tamil News

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சரத்பவார், கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்ய 15 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

அதன்படி உயர்நிலைக் குழுக் கூட்டம் கூடிய நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக சரத்பவார் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சரத்பவார் தனது ராஜினாமாவை திரும்பப்பெற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி குழு பரிந்துரை செய்துள்ளது. இதனை ஏற்று சரத்பவார் தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக சரத்பவாரே தொடர்வார்.

Latest Tamil News
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்துக்கு வெளியே, சரத்பவார் பதவியில் இருந்து விலகக்கூடாது என கட்சியின் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (29)

  • அப்புசாமி -

    நான் அடிக்குற மாதிரி அடிக்கிறேன். நீ அழுவுற மாதிரி அழு.

  • S.Ganesan - Hosur,இந்தியா

    காங்கிரஸ் , இந்த சரத் பவார் கட்சி எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இந்த ராஜினாமா என்பது ஒரு நாடகம் என்று நான் அப்போதே கூறினேன். இந்த வயதிலும் இந்த முதியவருக்கு அந்த கட்சி தலைவர் பதவிக்கு ஆசை. இல்லை இல்லை, பேராசை.

  • அருண்குமார் , சென்னை - ,

    மகாராஷ்டிராவின் கட்டுமரம்

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    தனது ராஜினாமாவை தன்னிடமே கொடுத்து தானே நிராகரித்த தானை தலைவன் சரத் பவார்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்