ADVERTISEMENT
சென்னை: பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்துவிட்டு பஸ் எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்துவிட்டு பஸ் எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்துள்ளது. ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில் இதுவரை புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை.
போக்குவரத்துறை நஷ்டத்தில் இயங்குவதாக கூறி கிராமப்புற பஸ்களை நிறுத்துவது கண்டிக்கத்தக்கது. பெண்கள் பயணம் செய்வதற்கு ஏதுவாக நகரப்புற பஸ்களின் செயல்பாட்டினை அதிகரிக்க வேண்டும். பஸ் சேவையை தனியாருக்கு தர டிரைவர், பஸ் குறைப்பு செயல்களில் அரசு ஈடுபடுகிறதா?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (4)
தமிழ்நாட்டில் எல்லாப் பேருந்து நிலையங்களிலும் பேருந்துகள் புறப்படும் நேரம் குறித்த கால அட்டவணையை முதலில் உடனடியாக வைக்கச் சொல்லுங்கள்,எந்தப் பேருந்து எப்ப வரும், எப்போ போகும்னு தெரியல.பொதுமக்கள் கிடந்து திண்டாடுறாங்க .
ஏன் கேக்குறீங்க , நாங்க படுற கஷடத்த இலவச பயண பஸ் வாறதே இல்லைங்க - ஒரு மணி நேரம் வெயிட் பண்ண வரும் . அந்த பத்து ரூபா இலவசத்துக்காக பாவம் கிராமத்து பெண்கள் காத்துருப்பாங்க பாருங்க ... தமிழகம் எங்கயோ போயிருச்சு
நீ எப்போ போயி எண்ண பார்த்த த சொல்லு முதலில்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
தமிழகத்தில் இந்த பிங்க் கலர் லிப்ஸ்டிக் போட்ட மகளிர் பேருந்துகளால் அரசுக்கு மிகவும் நஷ்டம் ஆகிறது ,அதனால் சும்மா அப்பப்ப சில பேருந்துகள் வரும், போகும் .