Load Image
Advertisement

பழனிசாமி மீது வழக்குப்பதிவு: உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்

Case registered against Palaniswami: Police information in High Court   பழனிசாமி மீது வழக்குப்பதிவு: உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்
ADVERTISEMENT

சென்னை: தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் அளித்தது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த மிலானி என்பவர், சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2021 சட்டசபை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி, தேர்தல் வேட்புமனு, பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் குறித்து தவறான தகவல் தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் முகாந்திரம் இருந்தால், வழக்குப்பதிவு செய்ய வேண்டும். விசாரித்து மே 26க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த வழக்கிற்கு தடை கேட்டு பழனிசாமி தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மிலானி தொகுதியை சாராதவர் தேர்தலில் போட்டியிடவில்லை. வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவிக்கவில்லை. இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஒராண்டு அவகாசத்திற்கு பிறகு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை கருத்தில் கொள்ளாமல், விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு. அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறியிருந்தார்.

Latest Tamil News
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, சேலம் மத்திய குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சேலம் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், வழக்கு அவசரம் அவசரமாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இதனையடுத்து, இந்த வழக்கை ஜூன் 6 ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை வழக்கை பெரிதுபடுத்த வேண்டாம் என போலீசாருக்கு உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து (4)

  • ஆரூர் ரங் -

    தேர்தல் கமிஷன் மட்டுமே நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுள்ளது. அதுவும் நேரடியாக கிரிமினல் வழக்கு போடவே🤔 முடியாது . வெளி தொகுதி நபருக்கு இதில் அருகதையில்லை. EPS நேர்மையாளரா என்று வழக்கு போட ரவுடிக் கும்பல் தீய முக வுக்கு என்ன தகுதி?

  • Ellamman - Chennai,இந்தியா

    மடியில் அவ்ளோ கணம்.....தடை கேக்குது....விசாரணை வேண்டாம் என்று மன்றாடுது...ஐயோ பாவம்.... விரைவாக விசாரணை செய்து...தன் மீது தவறு இல்லை என்று நிரூபித்தால் தி மு க வுக்கு பின்னடைவு என்பது கூட புரியாத பேக்கு இல்லை...இது... ஊழல் பிறவி......சம்பந்தி வீட்டுக்கு அரசு ஒப்பந்தம் கொடுத்த இழி பிறப்பு...

  • Ellamman - Chennai,இந்தியா

    விசாரணைக்கு வெளிப்படையான தடை போட நீதிபதியை தடுத்தது எது?? வாய்மொழி உத்தரவு எல்லாம் நீதி திபரிபாலனத்துக்கு உகந்ததா?? வழக்கு பதிந்திருந்தால் காலதாமதமின்றி விரைவாக விசாரிக்க அல்லவா உத்தரவிட்டு இருக்கவேண்டும்??பொய்யென நிரூபிக்க சிலுவம்பாளையம் அமாவாசைக்கு தேவை உள்ளது அல்லவா??அதுவும் விரைவாக பொய் என நிரூபித்தால் தி மு க வுக்கு பின்னடைவு தானே?? அந்த வாய்ப்பை இந்த நவீன அமாவாசை தவறவிடுவது ஏனோ? மடியில் அவ்ளோ கணம்...

  • Balasubramanyan - Chennai,இந்தியா

    Our EPS IS THE FOLLOWER OF ARICHANDRAN.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement