Load Image
Advertisement

இலங்கையில் ரூ.3,200 கோடி முதலீடு செய்கிறது சீன அரசு

The Chinese government is investing Rs.3,200 crore in Sri Lanka    இலங்கையில் ரூ.3,200 கோடி முதலீடு செய்கிறது சீன அரசு
ADVERTISEMENT

கொழும்பு: நம் அண்டை நாடான இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில், 3,200 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கு போக்குவரத்து முனையத்தை சீன அரசு உருவாக்க உள்ளது.

அன்னிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த இலங்கை, அதில் இருந்து மீண்டு வர முயற்சித்து வருகிறது. இதற்காக பெரிய அளவிலான வெளிநாட்டு முதலீடுகளை இலங்கை அரசு எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்த நேரத்தில், இலங்கையில் மிகப் பெரிய முதலீட்டை செய்ய உள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில், 3,200 கோடி ரூபாய் மதிப்பிலான மிக பிரமாண்ட சரக்கு போக்குவரத்து முனையத்தை சீன அரசு அமைக்க உள்ளது.
Latest Tamil News
சீன அரசுக்கு சொந்தமான, 'சீனா வணிகர்கள் குழு' என்ற நிறுவனம் இந்த திட்டத்தை நிறைவேற்ற உள்ளது. வரும் 2025ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட உள்ள இந்த முனையத்தின் 70 சதவீத பங்குகள் சீன அரசு வசம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, சீனா வணிகர்கள் குழு நிறுவனம் இலங்கையில் செய்துள்ள முதலீடுகள் 16 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தை சீனா வணிகர்கள் குழு தான் நிர்வகித்து வருகிறது. இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு பின், அந்நாட்டில் செய்யப்பட உள்ள மிகப் பெரிய வெளிநாட்டு முதலீடாக இது பார்க்கப்படுகிறது.


வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    எப்படியும் இலங்கை அரசால் அந்தக் கடனை திருப்பி செலுத்த முடியாது. சீனா, அந்த துறைமுக நிலப்பகுதியை ஆட்டையப் போட்டுவிடும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்