Load Image
Advertisement

யாத்திரையில் இறந்தவர் குடும்பத்துக்கு ராகுல் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?

What is Rahuls promise to the family of the person who died on the pilgrimage?   யாத்திரையில் இறந்தவர் குடும்பத்துக்கு ராகுல் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?
ADVERTISEMENT


இறந்து போன தொண்டரின் குடும்பத்துக்கு உதவித் தொகை தர்றதா சொல்லிட்டு, இழுத்தடிக்கிறாங்க பா...'' என்றபடியே வந்தமர்ந்தார், அன்வர்பாய்.
எந்தக் கட்சியில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் தொண்டர் கணேசன்... இவர், மூத்த தலைவர் குமரி அனந்தன் நடத்திய அத்தனை நடை பயணத்துலயும் தவறாம கலந்துக்கிட்டாரு... அதனால, 'யாத்திரை கணேசன்'னு அடைமொழியோடு அழைச்சாங்க பா...


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், சமீபத்துல ஒற்றுமை யாத்திரை நடத்தினாருல்ல... அதுல கலந்துக்கிட்ட கணேசன், மஹாராஷ்டிரா மாநிலத்தில் லாரி மோதி இறந்துட்டாரு பா...
Latest Tamil News அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய ராகுல், அவருடைய குடும்பத்துக்கு கட்சியில இருந்து, 5 லட்சம் ரூபாய் தர்றதா சொன்னாரு... மஹராஷ்டிரா மாநில அரசும், 5 லட்சம் ரூபாய் தர்றதா அறிவிச்சது பா...

'போன வருஷம் நவம்பர்ல கணேசன் இறந்து போனாரு... இன்ன தேதி வரை அந்த உதவித் தொகைகள், அவரது குடும்பத்துக்கு வந்து சேரல பா...

அதோட பெரிய கொடுமை என்னன்னா, கணேசன் இறப்பு சான்றிதழை கூட வாங்க முடியாம, அவங்க குடும்பத்தினர் நடையா நடந்துட்டு இருக்காங்க... இது சம்பந்தமா, காங்கிரஸ் மேலிடத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பதிலே இல்லை பா...'' என்றார், அன்வர்பாய்.


வாசகர் கருத்து (8)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    ஏன் அங்கு மோடியின் ..... இடத்திற்கு போகிறாய். கேட்டது கான்க்ரீஸ் தொண்டான். கேஆர்ப்பது அவர்கள் தலியவரய் உனக்கு ஏன் அரிப்பு பொங்கி கிட்டு வருது

  • சி சொர்ணரதி -

    தன்னுடைய யாத்திரையில் நடந்து மரணம் அடைந்த தொண்டரின் குடும்பத்துக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதவர் தான் நாட்டை காப்பாற்ற போகிறார் என்று ஒன்று இரண்டு காங்கிரஸ் தொண்டர்கள் நம்பலாம்.... ஆனால் மக்கள் நம்ப போவதில்லை...

  • Narayanan Muthu - chennai,இந்தியா

    மோடி கொடுத்த பல வாக்குறுதிகள் என்னாச்சுன்னு கேட்க சங்கிகள் எவனுக்காவது தைரியம் இருக்கா.

  • Anand - chennai,இந்தியா

    அவன் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தது தான் மிச்சம்.....

  • Senthil - Proud to be an Indian - Paramakudi,இந்தியா

    போயி ராகுலை பிடுச்சி கதறுங்க ..... ராகுல் ஜி ராகுல் ஜி நீங்க சொன்ன அஞ்சு லட்சம் என்ன ஆச்சி ..அவரு சொல்வாரு - என் பேச்சு காத்தோடு போயாச்சு - அடுத்த வருடம் நான் பிரதமர் ஆன பிறகு வந்து வாங்கிக்கோங்க ஜி னு சொல்லுவாரு .... தமிழக காங்கிரஸ் விசுவாசியின் நிலைமை இதுதான் ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement