ADVERTISEMENT
சென்னை : பால் உற்பத்தியை பெருக்க, 2 லட்சம் கறவை பசுக்களை வாங்க, ஆவின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மாநிலம் முழுதும், 10 ஆயிரத்து 572 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றின் வாயிலாக, ஆவின் நிறுவனத்திற்கு நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டது. இதில், 14.5 லட்சம் லிட்டர் பால் சென்னையிலும், மீதமுள்ள பால் மற்ற மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்பட்டது.
தற்போது, ஆவினுக்கான பால் கொள்முதல் குறைந்துள்ளது. இதனால், நெய், வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட பால் பொருட்கள் உற்பத்தியும் கணிசமாக குறைந்துள்ளன. இதேநிலை தொடர்ந்தால், ஆவின் பெரிய அளவில் நஷ்டத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.பால் உற்பத்தியை அதிகரித்தால், இப்பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதால், அதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன. அதன்படி, இரண்டு லட்சம் கறவை பசுக்களை, பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கான பயனாளிகள் தேர்வு, தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நடந்து வருகிறது.
ஒவ்வொரு கறவை பசுவும் 30 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில், வங்கி கடனில் வாங்கப்பட உள்ளது. இதன் வாயிலாக பால் கொள்முதலை, 10 லட்சம் லிட்டர் வரை அதிகரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கால்நடைகள் கொள்முதல் பணிகளை, மே இறுதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (10)
அடுத்து மாட்டு தீவனம் வாங்க ஆர்வம் காட்டுவாங்க ..பாகிஸ்தானில் இம்ரான் கோழிகளின் உற்பத்தி மற்றும் முட்டை கருத்தில் கொண்டு இலவச கோழி திட்டம் கொண்டுவந்தார் ..மூணே மாசத்தில் கோழிகள் ஸ்வாஹா ...
பால் ஊழல். போதாதென்று இப்ப அடுத்து கறவை பசுக்கள் வாங்குவதிலும் ஊழலா...? அந்த மாட்டுக்கு நீங்கள் செய்யும் ஊழல் பற்றி தெரியுமா...? தெரிந்திருந்தால் இந்நேரம் எட்டி உதைத்திருக்குமே...
அப்ப மாடு மேய்க்கும் வேலைக்கு அரசாங்கம் ஆள் எடுப்பாங்க போல இருக்கு ...
திமுக ஒரு அறிவிப்பு வெளியிட்ட அதுக்கு ஆயிரம் உள்நோக்கம் இருக்கும். அதே மாதரி கறவை மாடு பெயரிலே அடிமாடு கேராளவிற்கு அனுப்ப திட்டம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
அப்புறம் காளைமாடுகளை வாங்கி😛 பசுக்களுக்கு சீர்திருத்தத் திருமணம் செய்து வைத்து செலவை நமது தலையில் கட்டுவர்.