Load Image
Advertisement

ராகுலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு

No Interim Relief For Rahul  From Gujarat High Court In Defamation Case ராகுலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு
ADVERTISEMENT
ஆமதாபாத்: பிரதமர் மோடியை அவதுாறாக பேசியது தொடர்பான வழக்கில், தனக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, காங்., முன்னாள் தலைவர் ராகுல் தாக்கல் செய்த மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்றம், கோடை விடுமுறை முடிந்த பிறகு இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறியுள்ளது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது, கர்நாடகாவின் கோலாரில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், 'நிரவ் மோடி, லலித் மோடி என, மோடி என்ற பெயர் உடைய அனைவருமே திருடர்களாக உள்ளனர்' என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் ராகுல் இவ்வாறு பேசியதாக, குஜராத் முன்னாள் அமைச்சரும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுமான பூர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், அவர் எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து ராகுல் சார்பில் சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Latest Tamil News
இதையடுத்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரிப்பதாக இருந்த நீதிபதி கீதா கோபிநாத், இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து இந்த மனு, நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இரு தரப்பிலும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று வழக்கின் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்ட உயர்நீதிமன்றம், கோடை விடுமுறைக்கு பிறகு இறுதித்தீர்ப்பு அளிக்கப்படும் எனக்கூறியுள்ளது. வரும் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு, ராகுலின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வாசகர் கருத்து (23)

  • Rajasekar Rajasekar -

    கோர்ட்டுக்கு போகும்போது கூட்டத்தோடு கோர்டுக்கு எச்சரிக்கை செய்வதுபோல் போகுது இது எதில் போய் முடியுமோ தெறியவில்லை.

  • R. Vidya Sagar - Chennai,இந்தியா

    நல்ல வேளை இப்பவே ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் கர்நாடகாவில் அனுதாப அலை கிளப்பியிருப்பார்.

  • ஆரூர் ரங் -

    இனிமே இடை...க்கால நிவாரணம் வேணும்னா பட்டாயாகிட்டேயா போகட்டும் .

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    எல்லாம் அவன் செயல்.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    எல்லாம் நன்மைக்கே. தேர்தலில் அனுதாப வாக்குகளாக மாறிடும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்