Load Image
Advertisement

லைக் குவிய பணம் செலுத்துங்க: இப்படியும் நடக்குது நூதன மோசடி!

பொள்ளாச்சி: 'சமூக வலைதளங்களில், 'லைக்' 'ப்ளூ டிக்' பெறுவதற்கு பணம் செலுத்தினால், 'பாலோவர்ஸ்' எண்ணிக்கை அதிகரிக்கும்,' என, வாட்ஸ்ஆப்களில், குறுஞ்செய்தி அனுப்பி, மோசடி செய்வது அதிகரித்து வருகிறது.

இளைஞர்கள், இன்ஸ்டாகிரம், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், போட்டோக்கள், செய்திகளை வெளியிட்டு, 'லைக்'குகளை குவிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

Latest Tamil News


இந்நிலையில், இளைஞர்களை கவரும் வகையில், 'லைக்', 'பாலோவர்ஸ்' எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமா, அதற்கேற்ப தொகையை செலுத்தினால் போதும்; நாங்கள் அந்த பணியை செய்து தருகிறோம், என, மோசடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதை, சிலர் தொழிலாக செய்வதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது, வாட்ஸ்ஆப்களில் வரும் மெசேஜ்களில், இன்ஸ்டாகிரம், பேஸ்புக், டெலிகிராம், யுடியூப்களில், லைக் மற்றும், ப்ளூ டிக் வர வேண்டுமென்றால் அதற்கேற்ப தொகையை செலுத்த வேண்டும்.

இன்ஸ்டாகிராமில் 'ஒன் கே பாலோவர்ஸ்' வேண்டுமென்றால், 200 ரூபாய், 500 பாலோவர்ஸ்க்கு, 110 ரூபாய்; 200 பாலோவர்ஸ்க்கு, 70 ரூபாய் பணம் செலுத்தலாம். டெமோவாக, 35 ரூபாய் செலுத்தினால், 100 பாலோவர்ஸ் கிடைக்கும். இதற்கு போன்பே, குகூள்பேயில் குறிப்பிட்ட எண்ணுக்கு பணம் அனுப்ப கூறுகின்றனர்.

இதுபோன்று வரும் செய்திகளை நம்பி பணம் அனுப்பி ஏமாறும் நிலை உள்ளது. லிங்க் வந்தால் அதை கிளிக் செய்வதால், வங்கி கணக்கில் இருக்கும் பணம் முழுவதும் சென்று விடும் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.

Latest Tamil News

கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன் கூறுகையில், ''இதுபோன்ற புகார்கள் எதுவும் வரவில்லை; வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை தொழிலாக செய்கின்றனரா அல்லது ஏமாற்று வேலையா என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். ஒருமுறை கடவுச் சொல், பாஸ்வேர்டு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தெரியாத மொபைல்ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம், என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார்.


வாசகர் கருத்து (4)

  • Raa - Chennai,இந்தியா

    கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன், அவர்களே, நீங்கள் யாராவது புகார் கொடுத்தால் தான் எந்த நடவடிக்கையும் எடுப்பீர்களா

  • ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா

    Youtube ல promotion போய்ட்டு இருக்கு subscribe க்கும் like க்கும்.

  • அப்புசாமி -

    இதெல்லாம் அந்த ரெண்டு கோடி வேலை வாய்ப்பா எடுத்துக்கணும். எப்படியாச்சும் சம்பாரிச்சா சரி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்