Load Image
Advertisement

துபாய் அரசை ஒப்பிட்டு தி.மு.க.,வுக்கு விமர்சனம் : கூட்டணியில் இருந்து வி.சி., வெளியேறுதா?

Criticism of DMK compared to Dubai government: Will VC leave the alliance?  துபாய் அரசை ஒப்பிட்டு தி.மு.க.,வுக்கு விமர்சனம் : கூட்டணியில் இருந்து வி.சி., வெளியேறுதா?
ADVERTISEMENT
தி.மு.க., கூட்டணியில் முக்கிய கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறது. ஆனால், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க., அரசையும், போலீஸ் துறையையும் விமர்சிப்பது தொடர்கிறது.
அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்வுக்கும், இரட்டை இலை சின்னம் கிடைத்ததற்கும், திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார். இது, அரசியல் நாகரிகம் என கருதினாலும், இதன் பின்னணியில், கூட்டணி அரசியல் இருக்கிறது என, வி.சி.,க்கள் கூறுகின்றனர்.
'பா.ஜ., - பா.ம.க., இல்லாத கூட்டணியில் தான் இருப்போம்' என, திருமாவளவன் தொடர்ந்து கூறி வருகிறார்.

அதாவது, அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்து, அந்த கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றால், தி.மு.க., கூட்டணியில் வி.சி., நீடிக்கும். பா.ம.க., தனித்து போட்டியிட்டால், அ.தி.மு.க., கூட்டணியில் அக்கட்சி இடம் பெறும் வாய்ப்பு உள்ளது.
சமீபத்தில், அம்பாசமுத்திரத்தில் பல்லை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பல்வீர்சிங் விவகாரத்தில், தி.மு.க., அரசை திருமாவளவன் தாக்கினார்.
தொழிலாளர்களுக்கு, 12 மணி நேரம், திருமண நிகழ்ச்சிகளில் மதுபானம் அனுமதி தொடர்பான அறிவிப்புகளையும் அவர் விமர்சித்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என, தி.மு.க., அரசுக்கு, அவர் கோரிக்கை விடுத்து வருகிறார்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஐ.டி., அணி மாநில நிர்வாகி ஒருவர் தன் 'டுவிட்டர்' பக்கத்தில், 'குடிமுரண்' என்ற தலைப்பில், தி.மு.க., அரசை கடுமையாக சாடியுள்ளார்.
அதில், 'துபாயில் மன்னர் ஆட்சி; ஆனால், குடிமக்களுக்காக தானியங்கி கருவியில் இலவச உணவு வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மக்கள் ஆட்சி; குடிகாரர்களுக்காக தானியங்கி கருவியில் சரக்கு விற்கப்படுகிறது' என்ற வாசகங்கள் இடம்
பெற்றுள்ளன.


இந்த வாசகங்களுக்கு கீழே, துபாய் இலவச உணவு தானியங்கி இயந்திரமும், தமிழகத்தின் டாஸ்மாக் தானியங்கி இயந்திரமும் இடம் பெற்றுள்ளது.
தொடர்ந்து தி.மு.க., அரசை வி.சி.,க்கள் விமர்சித்தபடி இருப்பதால், கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கான முன்னோட்டமா என்ற கேள்வி, கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.- நமது நிருபர் -

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோவாசகர் கருத்து (13)

 • Dharmavaan - Chennai,இந்தியா

  ஏதோ உருப்படியாக துபாயை நல்ல விஷயத்தில் ஒப்பிட்டிருக்கிறான் குருமா தேவலை

 • Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  துபாய்ல வீணாப்போன கட்சிகள் இல்லப்பா .. எல்லாரும் உழைச்சு சாப்புடுற தேசம். வீணாப்போன விசிக கும்பல் மாதிரி ஏமாத்தி பொழப்பு நடத்த முடியாது இங்க..

 • zakir hassan - doha,கத்தார்

  ஒருவேளை கட்சி சின்னத்தில் நீ போட்டியிட்டால் உனக்கு எம் பி சீட்டு தரமாட்டோமென்று திமுக சொல்லிவிட்டதோ

 • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

  சிறுத்தைக்குட்டிக்கு துபாய் வாடிகன் மட்டுமே கண்ணுக்கு தெரியும். நமது நாட்டில் யோக்கியமாக அரசு நடத்தும் யோகி அவர்கள் உத்திரபிரதேசத்தில் ரேஷன் பொருட்களை மக்களுக்கு தடையின்றி வழங்க தானியங்கி இயந்திரம் அமைத்துள்ளார். சனாதனம் மக்களை காக்கும், திருட்டு திராவிடம் என்றும் மக்களை வதைக்கும்.

 • r ravichandran - chennai,இந்தியா

  விசிக தனித்து நின்றால் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் திமுக அதிகபட்சமாக 1000 ஓட்டு இழக்க நேரிடும். எனவே திமுக , விசிக கட்சியை விட்டு விடகூடாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement