Load Image
Advertisement

பாலியல் புகார்: 9வது நாளாக தொடரும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்

புதுடில்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜ., எம்பி.,யும் ஆன பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து தொடர்ந்து 9வது நாளாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Tamil News

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ., எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த, பாக்சிங் வீராங்கனை மேரி கோம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதி கிடைக்கும் வரை, போலீஸ் நிர்வாகம் எவ்வளவு சித்ரவதை செய்தாலும் போராட்டம் நடத்துவோம் என டில்லி ஜன்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, 9வது நாளாக டில்லி ஜந்தர் மந்தரில், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டக்காரர்கள் கோரிக்கைப்படி, பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்தனர்.

Latest Tamil News
இதற்கிடையே, 9வது நாளாக தொடரும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். பிரிஜ் பூஷன் சிங் தான் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்றும் விசாரணையை எதிர் கொள்ள தயார் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (9)

  • ஆரூர் ரங் -

    யாரை அழிப்பது ன்னு முடிவு செய்தாலும் எளிதான ஆயுதம் பாலியல் புகார். குற்றம் பஞ்சாபில் நடந்ததாக புகார். நடவடிக்கை எடுக்க வேண்டியது பஞ்சாப் ஆம் ஆத்மி ஆட்சி. அதற்கு சம்பந்தமில்லாத டெல்லியில்☺️ போராட்டம் கிரிப்டோ 🔧 டூல்கிட் வேலை.

  • சூரியா -

    இந்த விஷயத்தில் கெஜரிவாலும், பிரியங்காவும் மூக்கை நுழைத்திருப்பதிலேயே, இதில் உள்ள அரசியல் புரிந்து இருக்கும். உலக அரங்கில் பதக்கம் வாங்கியவர்கள், உள்நாட்டுப் போட்டிகளிலும் விளையாடி, இங்குள்ள இளம் வீரர்களை ஊக்குவிக்கும்படி அரசு சொல்கிறது. அதை ஏற்க மனமில்லாதவர்களின் எதிர்ப்பே இப்படிப்பட்ட போராட்டங்களாக வருகின்றன.

  • DVRR - Kolkata,இந்தியா

    வேடிக்கையா பொழுது போகணும் கொஞ்சம் விளையாட்டா வாழ்ந்து பார்க்கணும் மாதிரி இருக்கின்றது இந்த போராட்டம் . இதில் வேடிக்கை என்னவென்றால் பிரிஜ் பூஷன் சிங் பிஜேபி எம்பி. ஆகவே முஸ்லீம் நேரு காங்கிரஸ் சொறிவால் கட்சி பார்ட்டி முஸ்லீம் பேகம் மும்தாஜ் கட்சி திருட்டு திராவிட மடியில் அரசு கட்சி .....என்று பிஜேபி எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு கொடுப்பதை பார்த்தால் நிச்சயம் ஏதோ இதில் உள்குத்து இருக்கின்றது. பிஜேபி எம் பி பாலியல் புகார் என்று சுற்றி வளைச்சி அதிலே வருகின்றது. பாலியல் அத்து மீறல் என்றால் என்ன??? 1) தின்பண்டம் வாங்கிக்கொடுத்து பாலியல் 2) உன்னை பாஸ் பண்ண வைக்கின்றான் இந்த (பலவித) தேர்வில் சொல்லி பாலியல் 3) உன்னை திருமணம் செய்துகொள்கின்றேன் என்று பாலியல் மேலே சொன்ன 3 ம் எப்படி பாலியல் ஆகும்??? சொன்னது செய்யவில்லை என்று பாலியல் புகார்???சொன்னதை செய்துவிட்டால் புகார் சொல்லவே மாட்டார்கள் அப்போது அது பாலியல் இல்லை 4) தனியாக செல்லும் பெண்ணை கடத்தி பாலியல் 5) பஸ்ஸில் அல்லாதது ஏதோ வாகனத்தில் பலர் இருக்கும் போது கண்டமேனி தொடுதல் - பாலியல் மேலே சொன்னபாயிண்ட் 4 எப்படி நடக்கும் தனியான பெண் 65 கிலோ ஆண் 50 கிலோ???எப்படி தனிஒருவன் ஒரு பெண்ணை தூக்கிக்கொண்டு அல்லது தள்ளிக்கொண்டு போய் படுக்கவைத்து பாலியல் செய்ய முடியும். இதுவே 4 பேர் கொண்ட கும்பல் அப்படி செய்ய முடியும். ஒரு ஆண் ஒரு பெண்ணை அவள் விருப்பமின்றி அவள் ஆதரவின்றி கட்டாய பாலியல் உறவு வைத்துக்கொள்ளமுடியவே முடியாது. பல ஆண் ஒரு பெண் அந்த பாலியல் முடியும். ஆகவே பாலியல் வன்முறையை பிரித்து வைத்து பார்த்தால் தான் பாலியல் இஷ்டத்துடன் இல்லை இஷ்டமில்லாமல் என்று தெரிந்து அதற்குத்தகுந்த முறையில் தண்டனை அறிவிக்க வேண்டும் சாதாரண (பண கனம் சுமக்கும் அல்ல) நீதிபதி அவர்களும் ஆய்ந்து அறிந்து. ஆகவே இந்த போராட்டமும் பாயிண்ட் 2 வினால் தான்

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    இந்த போராட்டம் 2024 எலெக்ஷன் வரை தொடரும், கோர்ட் கேஸ் ஆச்சி, fir போட்டாச்சி, இன்னும் என்ன வேணும், எப்போ எதிர் கட்சி வந்துச்சோ அப்போவே இது வேற மாதிரின்னு ஆயிடுச்சி, அடுத்து விவசாயி சங்கம் , ராவுல், கனி மொழி, uddav, உதயநிதி, தேஜாசுவி, நிதிஷ், பின்னரயி, எல்லோரும் வருவாங்கோ, கல்லேரிதல் நடக்கும். Wait and watch

  • பைரவர் சம்பத் குமார் -

    1). நாட்டில் பிரதமர் ஒன்றும் நீதி துறையின் தலைவர் அல்ல.2). அவர் ஒன்றும் தலைமை நீதிபதியும் அல்ல.3).பிரதமர் தன்னிச்சையாக முடிவெடுக்கும் மனிதரும் கிடையாது அதாவது இந்திராகாந்தி மற்றும் ராஜீவ் காந்தி மற்றும் நேரு போல இந்தியா என்பது தங்களது சொந்த சாம்ராஜியம் என்று நினைத்து நமது பிரதமர் நடந்து கொண்டது இல்லை. 4). தவறு நடந்து இருந்தால் காவல் மற்றும் நீதித்துறையை அணுகினால் வேலை நடக்கும்.5). அதைவிடத்து ஹரியனாவில் பண்ண வேண்டிய போராட்டத்தை டெல்லி வந்து நடத்த வேண்டிய அவசியமில்லை. 6). கோர்ட்டை அணுக தீர்ப்பை பெற வேண்டிய விஷயத்தை டெல்லி ரோட்டில் செய்தால் ஒன்றும் நடைபெறாது.7).மேலும் யாரோ ஒருவர் மீது இருக்கும் தவறுக்கு பிரதமர் எதற்காக வாய் திறக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்தான் இதனை எதிர்கொள்ள வேண்டும்.8). நிறைய கழிசடைகள் வந்து போவதை பார்த்தால் இது ஜோடிக்கப்பட்டிருக்கக் வேண்டும் என்று தோன்றுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்