Load Image
Advertisement

ஊழல் மட்டுமே செய்து வரும் பாஜ.,: ராகுல் பேச்சு

துமகூர்: 'கடந்த 3 ஆண்டுகளாக ஊழல் மட்டுமே பாஜ., செய்து வந்தது. இதனால் கர்நாடகா மக்கள் பாஜ., அரசை 40 சதவீத கமிஷன் அரசு என அழைத்ததாக' காங்., மூத்த தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

Latest Tamil News

கர்நாடகா மாநிலம் துமகுருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு வருகிறார், ஆனால் தன்னைப் பற்றி மட்டுமே பேசுகிறார். கடந்த 3 ஆண்டுகளில் கர்நாடகாவிற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?. அதேபோல் மாநிலத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் இளைஞர்களுக்கு என்ன செய்தீர்கள்?.

கடந்த 3 ஆண்டுகளாக ஊழல் மட்டுமே பாஜ., செய்து வந்தது. இதனால் கர்நாடகா மக்கள் பாஜ., அரசை 40 சதவீத கமிஷன் அரசு என அழைத்தனர். அதாவது பொதுமக்களிடம் செய்யும் வேலைகள் அனைத்துக்கும் மக்களிடம் இருந்து 40 சதவீத கமிஷன் வாங்குகின்றனர். இது பிரதமருக்கும் தெரியும். ஆனால் அவர் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?.

Latest Tamil News
நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். இந்தத் தேர்தல் கர்நாடகாவின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக் கூடியது. காங்கிரஸ் உங்களை 91 முறை துஷ்பிரயோகம் செய்தது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் கர்நாடகாவுக்கு என்ன செய்தீர்கள் என்று மக்களுக்கு கூறவில்லையா?. இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (27)

  • N .Senthilkumar -

    ஐயா ராகுல் அவர்களே, நீங்கள் பேசுவதை யோசித்தால் பயமாக உள்ளது. சில ஆண்டுகளில் உங்களை மற்றும் உங்கள் கட்சியை GooGLE தான் தேட. வேண்டும். நீங்கள் இந்த உலகத்தில் தான் உள்ளீர்களா அல்லது செவ்வாய் கிரகத்தில் உள்ளீர்களா? பாஜாக வளர்ச்சிக்கு நீங்கள் ஒருவரே போதும். நன்றி. முதலில் உங்களில் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள் பின் கருத்து கூறுங்கள்.

  • அரசியல்பால் - dairy circle, bangalore,இந்தியா

    ஏண்டா கண்ணு, உன்னோட கூட்டணி கட்சி நிதி அமைச்சர் சொல்றாரு அந்த கட்சியின் மகனும் மருமகனும் வந்த இரு வருடத்தில் 30000கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டனர் என்று , அதனை அங்கிருந்த மக்கள் உன்னிடம் கேட்க வில்லையா?

  • R Kay - Chennai,இந்தியா

    மக்களுக்கே தெரியும் பாஜக அரசு இதுவரை என்னென்ன செய்துள்ளது என்று. நீங்கள் ஒன்றும் எங்கள் பிரதிநிதி இல்லை. எங்கள் சார்பாக கேள்விகள் கேட்பதற்கு. அறுபதாண்டு கால கான்+க்ராஸ் ஆட்சியில் நீங்கள் பிடுங்கிய ஆணிகளை விட பாஜக செய்த நல்லவை அதிகம். எவ்வளவு கதறினாலும், நீங்கள் செல்லுமிடமெல்லாம், உங்களுக்கு தோல்வி மட்டுமே வேறு பிழைப்பை தேடிக்கொள்ளுங்கள்.

  • Vijay - Chennai,இந்தியா

    தமிழ்நாடு நாசமானலும் பரவாயில்லை என்று தங்கள் மதத்தை மட்டுமே முன்னிறுத்தி ஒட்டு போடும் சிறுபான்மையினர் சார்பாக வாழ்த்துக்கள். ஆனா ஒன்னு. திமுக ஆட்சியில் வாழ பழகிட்டா, எவ்வளவு மோசமான ஆட்சியிலும் சுலபமாக வாழலாம்.

  • ram -

    வீனாப்போன ராகுல்.. நீயெல்லாம் ஊழல் பத்தி பேசுறே.. உங்களோட பொழப்பே ஊழல் தான் அப்புறம் எப்படி உனக்கு ஊழல்ன்னா எதுன்னு தெரியும். நீயெல்லாம் பேச வந்துட்டே.. உனக்கே இப்படி பேசுறது கூச்சமா தெரியலே.. இதை எப்படி மக்கள் நம்புவாங்கன்னு தோனலே..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்