Load Image
Advertisement

உலகத்தைச் சுற்றிப்பார்க்க விரும்புபர்களுக்கு ஏற்ற வேலை

Ideal job for people who like to travel the world   உலகத்தைச் சுற்றிப்பார்க்க விரும்புபர்களுக்கு ஏற்ற வேலை
ADVERTISEMENT
மானுடவியல் என்பது மனிதர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த ஓர் பாடப்பிரிவு. ஆங்கிலத்தில் 'ஆந்த்ரோபாலஜி' என அழைக்கப்படும் மானுடவியலில் உலக பல்கலை.,கள் பல பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. கல்தோன்றி மண் தோன்றாகக் காலம் தொடங்கி மனிதனின் கற்கால, உலோக கால பரிணாம வளர்ச்சி, நவநாகரிக யுக வளர்ச்சிவரை மானுடவியல் ஆராய்கிறது.

காலப்போக்கில் நிலவுடைமை, அரசியல் சித்தாந்தம் உள்ளிட்ட குறித்தும் மானுடவியலில் ஆராயப்பட்டது. அரசியல் மானுடவியல், இன்று மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறும் பிரிவாக உள்ளது. மானுடவியல் பாடம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

மனிதனின் பல்வேறு கலாசாரங்கள், வாழ்வியல் முறைகள், பண்டிகை, வழிபாட்டுமுறை, மொழி, இனம், மதம், சடங்கு உள்ளிட்டவை கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக உருமாறி வருகின்றன. நாகரிகம் மற்றும் தொழில்நுட்பம் வளர வளர உலகின் வெவ்வேறு பகுதிகளில் மனிதனின் வாழ்வியல்முறை மாற்றம் காண்கிறது. இதுகுறித்து சாக்ரடீஸ், அரிஸ்டாட்டல், பிளாட்டோ உள்ளிட்ட கிரேக்க தத்துவ மேதைகள் பலகாலம் ஆராய்ந்து குறிப்புகளை எழுதிவைத்துச் சென்றனர்.
Latest Tamil News
19 ஆம் நூற்றாண்டில் மேலை நாட்டில் முதுகலைப் பட்டம் பெற்ற கல்லூரிப் பேராசிரியர்கள் பலர் மனிதனின் வாழ்வியலைப் படிக்க ஓர் கல்லூரி பாடப்பிரிவை ஏற்படுத்தி அதற்கு மானுடவியல் எனப் பெயரிட்டனர். இளங்கலை மானுடவியல் பயின்ற பலர் முதுகலை பழம்பொருள் ஆராய்ச்சிப் பாடப்பிரிவில் சேர்ந்து பல சாதனைகளைப் புரிந்துள்ளனர். டைனோசரின் படிமம் தொடங்கி, சிந்து சமவெளி உள்ளிட்ட உலகின் மூத்த நாகரிகங்கள்வரை இவர்கள் ஆராய்ந்தனர்.

மானுடவியல் இளங்கலைப் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு இன்று பெரிய கார்பரேட் நிறுவனங்கள் தொடங்கி பல்வேறு நாடுகளின் அரசுகள்வரை அனைவரும் வேலைவாய்ப்பை அளித்து வருகின்றனர். உலகத்தை சுற்றிப்பார்த்து பல்வேறு தரப்பினருடன் பழகும் ஆசை கொண்டவர்களுக்கு ஏற்ற பாடப்பிரிவாக மானுடவியல் உள்ளது. மானுடவியலால் தனியார் நிறுவனங்களுக்கு என்ன லாபம் என நினைக்கலாம்.

தனியார் பெருநிறுவனங்கள் மானுடவியலை நன்கு அறிந்தவர்களை பணியில் அமர்ந்துகின்றன. இவர்கள் நிறுவனத்தின் கிளைகள் உள்ள நாடுகளில் அப்பகுதி மக்களின் மொழி, வாழ்வியல் முறை குறித்து நன்கு அறிந்து அவர்களோடு பழகி அறிக்கை சமர்ப்பிப்பர். உதாரணமாக ஒர் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனம் உள்ளது என வைத்துக்கொள்வோம். இவர்களது மானுடவியல் பணியாளர்கள் இந்த நிறுவனம் புதிதாக தொழிற்சாலை துவங்கும் ஓர் பகுதியில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தால் அந்த இடத்தில் தங்கள் நிறுவனம் வேரூன்ற பல மார்கெட்டிங் திட்டங்களை இடுவர்.
Latest Tamil News
குறிப்பிட்ட நாட்டில் மக்களின் விருப்பங்களை இவ்வாறு மானுடவியல் நிபுணர்கள் உதவியுடன் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப அவர்கள் விருப்பம்போல பொருட்களை உருவாக்கி வர்த்தகத்தைப் பெருக்குவர்.
வர்த்தக நோக்கம் தவிர தன்னார்வத் தொண்டுக்காவும் மானுடவியல் நிபுணர்கள் பலர் பயன்படுத்தப்படுகின்றனர். அமெரிக்காவின் பிரபல செலோ இசைக்கலைஞர் யோ யோ மா, மானுடவியல் பட்டம் பெற்றவர்.

இவருக்கு அப்போதைய அமெரிக்க ஒபாமா அரசு வாய்ப்பொன்றை வழங்கியது. இதன்படி யோ யோ மா உலகின் பல பின்தங்கிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். ஆஃப்ரிக்க நாடுகளில் ஆப்ரிக்க பாரம்பரிய இசைக் கலைஞர்களுடன் ஒன்றிணைத்து வீதியில் இசைக் கச்சேரி நடத்தினார். அமெரிக்காவின் முகமாக அடையாளம் காணப்பட்ட யோ யோ மா, இந்தியா, ஜப்பான், சீனா என பல நாடுகளின் எளிய மக்களின் வாழ்வியலை தனது இசை மூலம் அடையாளம் கண்டு அமெரிக்க அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். அவர் அளித்த அறிக்கை, ஒபாமா அரசுக்கு பேருதவியாக இருந்தது.

பல்வேறு உலக நாடுகளுடன் அமெரிக்கா இடும் சர்வதேச ஒப்பந்தங்கள், உலக நாடுகளுடன் அமெரிக்காவின் ராணுவ மற்றும் சமூக நல்லுறவு உள்ளிட்ட அனைத்தின் தரமும் உயர்ந்தன. மானுடவியலைப் படிப்பதன் மூலம் உலக அரசியல் நல்லுறவு மற்றும் பொருளாதாரம் மேம்படும் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. எனவே மானுடவியலில் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த பட்டப்படிப்பை முடிப்பது அவர்களது எதிர்காலத்துக்கு உதவும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement