Load Image
Advertisement

காங்., வெற்றி பெறாவிட்டால் எதிர்கால தலைமுறைக்கு ஆபத்து: கார்கே கணிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கவில்லை என்றால், அது எதிர்கால தலைமுறைக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

Latest Tamil News

கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில், ஷிமோகா நகரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கார்கே பேசியதாவது: கர்நாடகா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கு கர்நாடக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓட்டளிக்க வேண்டும். காங்கிரஸ் வெற்றி பெறாவிட்டால் அது எதிர்கால தலைமுறைக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்தது காங்கிரஸ் தான். அதன் பலனைத்தான் தற்போது பலரும் அனுபவித்து வருகிறார்கள். மோடி பிரதமராக முடிந்ததும் அதனால் தான். கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியில்தான் கர்நாடகாவில் ஏராளமான கல்வி நிலையங்கள் கொண்டுவரப்பட்டன. பாஜ., என்ன செய்தது? அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஏராளமான அரசு பள்ளிகள் மூடப்பட்டன. தனியாருக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டார்கள்.

Latest Tamil News
மக்களுக்கு முன்பாக, உண்மையை பேசுகிறோம். ஓட்டுக்களை பெற பாஜ., பொய் கூறி வருகிறது. நான் உங்களுக்கு பல உதாரணங்களைக் கூற முடியும். பழைய ரயில் என்ஜினுக்கு பெயிண்ட் அடித்து, மைசூரு-வாரணாசி இடையே புதிய ரயில் சேவை என்று கூறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (46)

  • R Kay - Chennai,இந்தியா

    போலி காந்தி தலைமுறைக்கா? கான்+க்ராஸ் தலைவர்கள் தலைமுறைக்கா? ஐயோ பாவம் அதுதான் ஏற்கெனவே பத்து தலைமுறைகளுக்கு சேர்த்திருப்பீர்களே இன்னும் என்ன ஆபத்து?

  • Vijay - Chennai,இந்தியா

    தமிழ்நாடு நாசமானலும் பரவாயில்லை என்று தங்கள் மதத்தை மட்டுமே முன்னிறுத்தி ஒட்டு போடும் சிறுபான்மையினர் சார்பாக வாழ்த்துக்கள். ஆனா ஒன்னு. திமுக ஆட்சியில் வாழ பழகிட்டா, எவ்வளவு மோசமான ஆட்சியிலும் சுலபமாக வாழலாம்.

  • s. mohan -

    யோவ் கார்கே எங்களுக்கும் உங்களை பற்றி நன்றாகவே தெரியும். இன்றைக்கு நீங்கள் இந்தியாவில் ஆட்சியில் இருந்திருந்தால் இந்தியா இந்நேரம் பாக்கிஸ்தான், ஸ்ரீலங்காவை போன்ற நிலைமையில் தான் இருந்திருக்கும். நீ கொள்ளையடிச்சு பணத்தை சேர்த்து வச்சிட்டு பேசற நாங்க என்ன பண்றது. இன்றைக்கு இந்தியாவை உலகமே உற்று நோக்குகிறதென்றால் இப்போ இருக்கிற ஆட்சியாலும், மோடியாலும் தான்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    மாதாஜியின் கொத்தடிமை

  • Ram - ottawa,கனடா

    இந்த கார்கீ வெற்றிபெற்றால் , திறமையானவர்களுக்கு ஆபத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்