Load Image
Advertisement

பிளஸ் 2 தேர்வில் ஆள் மாறாட்டமா? மாணவர்களிடம் தொடர் விசாரணை!

சென்னை : பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில் கையெழுத்து மாற்றம், அடித்தல், திருத்தல் இருந்ததால், ஆள் மாறாட்டம் நடந்ததா என, மாணவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்த பிறகே, தேர்வு முடிவை வெளியிட உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 13ல் துவங்கி, ஏப்., 3ல் நிறைவடைந்தது. இதில், 8.58 லட்சம் பேருக்கு மேலானோர் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டனர்.

விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்துள்ளது.

மதிப்பீட்டு பணியின் போது சில விடைத்தாள்களில், மாணவர்களின் கையெழுத்து, சில பக்கங்களில் மாறுபாடாக இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது.

சில விடைத்தாள்களில், சில பக்கங்களில் விடை எழுதி அடிக்கப்பட்டு உள்ளது. சில பக்கங்கள் எந்த ஒரு எழுத்தும் இன்றி காலியாக விடப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு வித்தி யாசங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

அந்த விடைத்தாள்கள் தனியாக, அரசு தேர்வுத் துறையின் சென்னை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள், ஒரு வாரமாக, மாணவர்கள், பெற்றோர், பள்ளி ஆசிரியர்களை அழைத்து விசாரித்து வருகின்றனர்.

மாணவர்களிடம் விளக்கம் பெறுவதுடன், தவறு நடக்கவில்லை என்பதற்கான உறுதி மொழி கடிதமும் எழுதி வாங்கப்படுகிறது.

சந்தேகத்துக்குரிய விடைத்தாள்களுக்கு, மாணவர்களிடம் முழு விசாரணை நடத்திய பிறகே, அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என, தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement