Load Image
Advertisement

பிரதமர் மீது மொபைல் போன் வீச்சு: மைசூரு பேரணியில் பரபரப்பு

மைசூரு: மைசூரில் நேற்று இரவு நடந்த பா.ஜ., பேரணியில், பிரதமர் நரேந்திர மோடி மீது மொபைல் போன் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Latest Tamil News

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சட்டசபை தேர்தல் மே 10ல் நடக்கிறது. 13ல் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. பிரசாரத்துக்காக பா.ஜ., காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர்.

இரண்டு நாள் பயணமாக கர்நாடகா வந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் நான்கு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று மூன்று மாவட்டங்களில் நடந்த பிரசார கூட்டங்களை முடித்தவர், மாலை 6:25 மணிக்கு மைசூரு வந்தார்.

மஹாராஜா கல்லுாரி மைதானத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். பின், கன்ஹவுஸ் பகுதியில் இருந்து, 6:40 மணிக்கு திறந்த வேனில் பேரணியாக புறப்பட்டார்.

உடன், பா.ஜ., மூத்த தலைவர்கள் ஈஸ்வரப்பா, ராமதாஸ் இருந்தனர். பாதுகாப்பு அதிகாரிகளும் பின்புறம் நின்றிருந்தனர்.

திரளான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று, மோடி மோடி என கோஷம் எழுப்பி வரவேற்றனர். மைசூரு தசரா விழாவின் ஜம்பு சவாரி செல்லும் ராஜ வீதியில், பேரணி சென்றது.

மக்கள், அவர் மீது மலர்கள் துாவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சின்ன கடிகாரம் பகுதி அருகே மோடியின் வாகனம், 7:30 மணிக்கு வந்த போது, மலர்களுடன் சேர்த்து ஒரு ஸ்மார்ட் மொபைல் போனும் மோடியை நோக்கி வீசப்பட்டது.

பறந்து சென்ற அந்த மொபைல் போன் மோடி மீது படாமல், வேனின் முன்பகுதியில் விழுந்தது. இதை பார்த்து, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.

நாலாபுறமும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். வேன் மீது விழுந்த மொபைல் போனை பறிமுதல் செய்தனர். அதை வீசிய நபரை தேடி வருகின்றனர். நகர் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
Latest Tamil News
இதனால், கன் ஹவுஸ் பகுதியில் இருந்து, எல்.ஐ.சி., சதுக்கம் வரை, மேலும் 4 கி.மீ., துாரம் செல்ல வேண்டிய பேரணி, தேசிய நெடுஞ்சாலை சதுக்கத்திலேயே பாதியில் நிறுத்தப்பட்டது.

தகவலறிந்து வந்த சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., அலோக் குமார், சம்பவம் குறித்து மோடியின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விபரம் கேட்டறிந்தார்.

இந்த சம்பவம் போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, பொது மக்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். இதற்கிடையில், சிறப்பு விமானம் வாயிலாக மைசூரில் இருந்து மோடி, நேற்று இரவு டில்லி புறப்பட்டு சென்றார்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோவாசகர் கருத்து (7)

 • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

  பூ வீசும் பொது கையில் இருந்த மொபைல் போனும் வீசப்பட்டு இருக்கும் என்று நினைக்கிர்றேன்.

 • பைரவர் சம்பத் குமார் -

  1).யார் என்று கண்டறிந்து... வேண்டும்.2). பிரதமர் மீது வீசும் ஒவ்வொரு வசை சொற்கள் மற்றும் இம்மாதிரியான நிகழ்வுகள் அவரின் புகழை மேலும் பன்மடங்கு உயர்த்த செய்யும்.3). பிரதமர் தேவையில்லாமல் இந்த மாதிரியான ஓபன் நடைபயணம் செய்தலை தவிர்க்க வேண்டும். 4). நிறைய கூட்டு கலவாணிகள் இருக்கும் வயிற்று எறிச்ஙலை போக்க என்ன தரம் கெட்ட வேலையும் செய்வார்கள் இந்த தரம் கெட்ட பயல்கள்..

 • அப்புசாமி -

  கேரளா, தமிழ்நாட்டில் இதுமாதிரி நடந்தாத் தான் பாதுகாப்பு குறைவுன்னு புலம்புவாங்க. இரட்டை இஞ்சின் மாநிலங்களில் நடந்தா ஓக்கே...

 • Sri,India - India,இந்தியா

  பிரதமர் பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம். கூடுதல் தடுப்பு அரண் அமைத்து பிரதமரை பாதுகாக்க வேண்டும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பாதுகாப்பில் எந்த வகையிலும் சமாதானம் செய்யக்கூடாது. குறிப்பாக் மலர் தூவுவதை அனுமதிக்கக்கூடாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement