கடந்த இரண்டாண்டு, தி.மு.க., ஆட்சியில், அமைச்சர்கள் சிலர், மேடையில் சர்ச்சையாக பேசி, கட்சி தலைமையிடம், 'டோஸ்' வாங்கியது உண்டு. அமைச்சர் பொன்முடி ஏற்கனவே, பஸ்களில் இலவசமாக பயணிக்கும் பெண்களை, 'ஓசி கிராக்கிகள்' எனக் கூறி, சர்ச்சையில் சிக்கினார்.
கொந்தளிப்பு
மனு கொடுக்க வந்த பெண் ஒருவரை, வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அந்த மனுவாலேயே அடித்ததாக புகார் எழுந்தது. அந்த பெண்ணை மனுவால் தலையில் அடிக்கும் வீடியோ பரவி, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இப்படி பொதுமக்களிடமும், குறிப்பாக பெண்களிடமும் அமைச்சர்கள் அநாகரிகமாக பேசிய நிகழ்வுகளும், சர்ச்சைப் பேச்சுகளும், முதல்வர் ஸ்டாலினை வருத்தம் அடையச் செய்தன.
'கட்சியினரின் நடவடிக்கையால், எனக்கு இரவில் துாக்கமில்லை; மேடையில் கவனமாக பேசுங்கள்; வெளியில் நம்மை கண்காணிக்கும் கேமராக்கள் இயங்குகின்றன' என, முதல்வர் ஸ்டாலின் எச்சரித்தார்.
ஆனாலும், சில மூத்த அமைச்சர்கள் தங்களின் வாய்க்கு வந்ததை பேசி, சர்ச்சையில் சிக்கி வருவது தொடர்கிறது. சமீபத்தில், அமைச்சர் தியாகராஜன், ஸ்டாலின் குடும்பத்தினரின் சொத்துக் குவிப்பு பற்றி பேசிய ஆடியோவை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
இது தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த சர்ச்சையாக, மூத்த அமைச்சர் துரைமுருகனின் துடுக்கு பேச்சு, பெண்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
சமீபத்தில், வேலுார் மாவட்டம், காட்பாடியில் நடந்த கூட்டம் ஒன்றில் துரைமுருகன் பேசுகையில், '1,000 ரூபாய் தருகிறோம்; கல்லுாரி மாணவியர் மொபைல் போன் வாங்கலாம். யாரிடமாவது ரகசியமாக பேசலாம்; யாரையாவது கூப்பிட்டு சினிமாவுக்கும் போகலாம்.
'உங்க அம்மாவுக்கும், 1,000 ரூபாய்; பொண்ணுக்கும், 1,000 ரூபாய்' என, பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் பேசிய வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. துரைமுருகனின் இந்த சர்ச்சை பேச்சுக்கு, சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் பதிவாகி வருகின்றன.
அ.தி.மு.க., பிரமுகர் நிர்மல்குமார், தன், 'டுவிட்டர்' பக்கத்தில், '1,000 ரூபாய் கொடுத்து பசங்களோட ஊர் சுத்துங்கன்னு சொல்றதுக்கு பெயர் என்ன தொழில் தெரியுமா; ஏழை மாணவியர் படிப்பிற்கு கொடுக்கும், 1,000 ரூபாயை இதற்கு மேலும் கேவலப்படுத்த முடியுமா...' என, முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
அமைதி ஏன்?
பல்வேறு மகளிர் அமைப்பினரும் கொதிப்படைந்து, அமைச்சர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக வலைதளங்கள் வாயிலாக வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினரும், சென்னை மாநகராட்சி, 134வது வார்டு கவுன்சிலருமான உமா ஆனந்தன் கூறியதாவது:
பெண்களை இழிவாக பேசுவதில் நீயா, நானா என, அமைச்சர்கள் போட்டி போடுகின்றனர். இந்த விவகாரத்தில் ஆளுமையுடன் முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களுக்கு சம உரிமை, பெண்ணடிமை ஒழிய வேண்டும் என பேசும், தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியான மா.கம்யூ., கட்சியைச் சேர்ந்த பெண் உரிமை அமைப்புகள் ஏன் கொடி பிடிக்காமல் அமைதி காக்கின்றன. அவர்களுக்கு காது கேட்கவில்லையா?
அமைச்சரவையில், மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள் தான் கோலோச்சுகின்றனர் என்ற அதிருப்தியில், முதல்வரை நேரடியாக கேட்க துணிச்சல் இல்லாத மூத்த அமைச்சர்கள், பழி தீர்க்க இப்படி பேசுகின்றனரோ என்ற சந்தேகம் வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் நிம்மதியாக, ஆறு மணி நேரம் துாங்க வேண்டும். அவரது ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கட்டும்; அது, அவசியம். அவரது துாக்கத்தை கெடுக்கிற அமைச்சர்களின் பதவியை பறிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (74)
2NU AANDU SAATHANAI IDHUDANA MUDHALVAR AVARGALEY VEKKA KEDU
துரைக்கு ஏற்கனவே ஒழுக்கமா பேசவராது அவன் செருப்படி வாங்க போறது நிச்சயம். நானும் கேட்கிறேன் நீங்க தானே இவனுகளை ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சீங்க இப்போ அனுபவிங்க.
அந்த ரோஷமான நாலு பெண்களும் அடுத்த மாதம் முதல் பணம் வாங்காமல் இருக்கவும்.
தேர்தல் நேரத்தில் ரொம்ப வேண்டியவர் மாதிரி கூழைக்கும்பிடு போட்டு வலம் வருவார்கள்.அப்போது இப்படி பேசினால் மூட வாக்காளர்கள் கம்முனு இருக்கமாட்டார்கள். அதனால் வேலை முடிந்தவுடன் நக்கலடிக்கிறார்கள்.
அவனுக்கு வோட்டு போட்ட பெண்களின் மனதை அறிய விழைகிறேன்