Load Image
Advertisement

வீடு புதுப்பிப்பு விவகாரத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு புதிய சிக்கல்!

புதுடில்லி- மதுபான கொள்கை ஊழல் வழக்கை தொடர்ந்து, வீடு புதுப்பிப்பு விவகாரத்தில் ஆம் ஆத்மி தலைவரான புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டது. வீடு புதுப்பிக்க, ௪௫ கோடி ரூபாய் செலவானதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான செலவு விபரங்களை தாக்கல் செய்யும்படி, தலைமைச் செயலருக்கு, புதுடில்லி துணைநிலை கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
Latest Tamil News

புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கடந்த 2021 - 2022ல், மதுபான கொள்கையை திருத்தியதில் ஊழல் நடந்ததாக பா.ஜ., புகார் கூறியது. இதையடுத்து, இது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார்.

விசாரணையை துவக்கிய சி.பி.ஐ., துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை கைது செய்தது. இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், சி.பி.ஐ., சமீபத்தில் விசாரித்தது.

இந்நிலையில், புதுடில்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள, முதல்வருக்கான அதிகாரப்பூர்வ அரசு வீட்டில், ௪௫ கோடி ரூபாய் அளவுக்கு புதுப்பிப்பு பணி நடந்ததாகவும், அதில் பெரும் மோசடி நடந்துள்ளதாகவும் பா.ஜ., குற்றஞ்சாட்டியது.

கடந்த ௨௦௨௦ செப்., ௯ முதல் ௨௦௨௨ ஜூன் வரை, இந்த புதுப்பிப்பு பணிகள் நடந்தன. இவற்றில், உள் அலங்காரத்துக்கு ௧௧.௩௦ கோடி ரூபாயும், பளிங்கு கற்களால் தரை அமைக்க, ௬.௦௨ கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவற்றைத் தவிர, உள் அலங்கார ஆலோசனைக்கு ௧ கோடி ரூபாய், மின் சாதனங்களுக்கு ௨.௫௮ கோடி ரூபாய், தீ தடுப்பு சாதனங்களுக்கு ௨.௮௫ கோடி ரூபாய், சமையலறை சாதனங்களுக்கு 11கோடி ரூபாய், பொருட்கள் வைப்பதற்கான மர அலமாரிகளுக்கு 1.41 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இதை, ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.

அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக்கர் கூறுகையில், ''முதல்வரின் வீட்டில் மூன்று முறை கூரை இடிந்து விழுந்துள்ளது.

''இதையடுத்தே, பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் நடந்துள்ளன. முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சொகுசு வசதிகளுக்காக இவை செலவிடப்படவில்லை,'' என, குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக இந்தப் பிரச்னை, புதுடில்லியில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
Latest Tamil News
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மாநில தலைமைச் செயலருக்கு, துணைநிலை கவர்னர் சக்சேனா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

முதல்வரின் வீடு புதுப்பிக்கும் பணி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்புடன் சேகரித்து வைக்க வேண்டும். அந்த ஆவணங்களின் அடிப்படையில், புதுப்பிப்பு பணிக்கான செலவு விபரங்கள் குறித்த அறிக்கையை, 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில், ஏற்கனவே துணை முதல்வர் சிறையில் உள்ளார். முதல்வர் கெஜ்ரிவாலிடமும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த சூழ்நிலையில், வீடு புதுப்பிப்பு விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (19)

 • s. mohan -

  ஆம் ஆத்மீ கட்சிக்காரர்கள் இப்பொழுது மௌனம் சாதிப்பது ஏன்? பிரதமரையும், பி ஜெ பியையும் வசைபாடும் இவர்களை போன்ற கேடுகெட்ட அரசியல்வாதிகளை வேரறுக்க வேண்டும். ஒரு வீட்டுக்கு என்ன 48 கோடி ரூபாயா செலவு? அந்த ஆடம்பர செலவை தவிர்த்துந்திருக்கலாமே. முதல்வருக்கு பணத்தாசை வந்துவிட்டது, சேர்ந்த இடம் அப்படி.

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  கருணா லல்லு ஆகியோருடன் சாதாரண ஊழல் விஷயங்களில் போட்டிபோட்டுக்கொண்டிருந்த கெஜ்ரி, நயவஞ்சகத்தில் தான் அவர்களை பலமடங்கு கெட்டிக்காரன் என்று இப்போது நிரூபித்துவிட்டான். இப்படியும் ஒரு அரசியல்வாதி இருக்கமுடியுமா என்று வியக்கும் வண்ணம், படித்துவிட்டு அரசியலுக்கு வருபவர்களை வெஃகி கூன்குறிகி நிற்கவைத்துவிட்டான். இனி நாட்டில் ஒரு படித்தவன் கூட அரசியலில் தலையெடுக்கமுடியாது. அதுவும் IIT என்றாலே அல்கொய்தா என்ற அளவுக்கு பயந்து மக்கள் விரட்டியடிக்கப்போகிறார்கள்.

 • Suppan - Mumbai,இந்தியா

  முதல்வர் நல்ல சொகுசான வீட்டில் வாழ்வது தவறல்ல. அதற்கு அவர் தகுதியானவர்தான். மேலும் அந்த வீடு அரசின் சொத்து. ஆனால் கெஜ்ரிவால் முன்பு பேசியது என்ன? நான் என்றைக்குமே தேர்தலில் போட்டியிட மாட்டேன் ...பின்னர் சொன்னது முதல்வருக்கு ஒரு சிறிய அறை இருந்தால் போதும் என்றெல்லாம் பேசியவர்தானே. திமுக சகவாசத்தால் வந்த வினையோ

 • enkeyem - sathy,இந்தியா

  புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதை மோடியின் ஆடம்பர வீடு என்று உருட்டிய நாதாரிகள் இப்போது எங்கே போனார்கள்

 • ஆரூர் ரங் -

  முதல் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்ட போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு பங்களாக்களில் வசிக்க மாட்டோம். சாதாரண வீடுகளில் மக்களோடு🙃 மக்களாக வாழ்வோம் என சத்தியமடித்தார் கெஜரிவால். முன்னர் நான் ஒரு சாமானியன் என்று கருணாநிதி கூறிக் கொண்டிருந்தார். அதே கதை😊ரிப்பீட்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்