Load Image
Advertisement

ராகுல் மேல்முறையீடு மனு: விசாரணை மே 2க்கு ஒத்திவைப்பு

ஆமதாபாத்: 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை எதிர்த்து, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை மே 2ம் தேதிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Latest Tamil News


ராகுலை எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டணை எதிர்த்து, சூரத் செசன்ஸ் கோர்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராகுல் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று(ஏப்ரல் 29) விசாரணைக்கு வந்தது.

Latest Tamil News
இந்த வழக்கில் ராகுல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாதிடுகையில், 2 ஆண்டு சிறைத்தண்டனை ஒரு நாளுக்கு குறைவாக வழங்கப்பட்டாலும், எம்.பி. பதவி இழப்பு ஏற்படாது. அவதூறு வழக்கில் நாட்டிலேயே அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதையடுத்து, மனு மீதான விசாரணை வரும் மே2ம் தேதிக்கு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement