Load Image
Advertisement

" மக்களுக்கு ஒன்றும் செய்யாத காங்கிரஸ் " - பிரதமர் மோடி தாக்கு

பெங்களூரு: கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு காங்கிரஸ் போலி வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளது என கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ல் பிரதமர் மோடி பேசினார்.

Latest Tamil News


கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் வரும் மே10ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 13ல் நடக்கிறது. இதனை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் பிதார் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகா மாநிலம் மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. கர்நாடகாவில் மீண்டும் பாஜ., ஆட்சி அமையும். கர்நாடகாவை இந்தியாவிலே நம்பர் 1 மாநிலமாக மாற்றுவதற்கான தேர்தல். மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சியடைந்தால் தான் வளர்ச்சி அடைய முடியும்.

மாநிலம், நம்பர் 1 ஆக இரட்டை என்ஜின் அரசாங்கம் மிகவும் முக்கியமானது. விவசாயிகள் நலனுக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. அதேபோல், அவர்களது ஆட்சி காலத்தில் மாநிலம் வளர்ச்சி அடைய வில்லை. காங்கிரஸ் ஆட்சியை விட பாஜ., ஆட்சியில் அன்னிய முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு காங்கிரஸ் போலி வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளது.

Latest Tamil News

இரட்டை என்ஜின் அரசாங்கம் என்றால் இரண்டு மடங்கு வேகத்தில் செயல்படுவது என்று அர்த்தம். ஏழைகளின் போராட்டத்தையும், வலியையும் காங்கிரஸ் ஒருபோதும் புரிந்து கொள்ளாது. நாட்டை பிளவுபடுத்தி வருகிறது காங்கிரஸ். இதுவரை காங்கிரஸ் கட்சியினர் என் மீது 91 முறை அவதூறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (24)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    காங்கிரஸ் ஆட்சி சரில்லேன்னுதானே மக்கள் முழு மெஜாரிட்டியோட உங்களைத் தேர்ந்து எடுத்தாங்க ,நீங்களுமா இப்படி ..???

  • அப்புசாமி -

    இத்தனை நாள் டபுள் இஞ்சின் தானே அங்கே ஓடிட்டிருக்கு. இதுவரை முன்னேறலியா?

  • venugopal s -

    பாஜகவின் கடந்த ஐந்து வருட ஆட்சியின் சாதனைகளை சொல்லி ஓட்டுக் கேட்க ஒன்றும் விஷயமில்லை போல !

  • g.s,rajan - chennai ,இந்தியா

    நம் நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி ஒண்ணுமே உயரவில்லை ,ஆனா நீங்க விலைவாசியைக் கடுமையா ஒண்ணு விடாம உசத்திட்டீங்க..சாமானிய மக்களுக்கு செலவுகள் கழுத்தை நெறிக்குது,விழி பிதுங்குது . .

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    பிரதமர் அவர்கள் தங்கள் செயத சாதனைகளை சொல்லி ஒட்டு கேட்க வேண்டும், அதை விட்டு காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை என்று இப்போதும் சொல்வது, தேர்தல் பயம் தந்து விட்டது போல தெரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்