Load Image
Advertisement

போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ்; மல்யுத்த சம்மேளன தலைவர்

"Won't Resign," Says Wrestling Body Chief After Police Case: 10 Points போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ்; மல்யுத்த சம்மேளன தலைவர்
ADVERTISEMENT
புதுடில்லி: மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ் உள்ளது எனக்குற்றம்சாட்டி உள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷண் சரண் சிங், தலைவர் பதவியில் இருந்து விலக மாட்டேன் எனக்கூறியுள்ளார்.

டில்லி ஜந்தர் மந்தரில் பெண் வீராங்கனைகள் நடத்தும் போராட்டம் தொடர்பாக அவர் கூறியதாவது: நான் அப்பாவி. விசாரணை அமைப்புகள் மீது முழு நம்பிக்கை உள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து மாறிக்கொண்டுள்ளது. முதலில் என்னை பதவி விலக சொன்னார்கள். பதவி விலகுவது என்றால், என் மீதான குற்றச்சாட்டை ஒப்பு கொள்வதற்கு சமம்.

Latest Tamil News

ராஜினாமா பெரிய விஷயமல்ல. ஆனால், நான் எந்த குற்றமும் செய்யவில்லை. நான் எம்.பி., மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஒரு குடும்பத்தினர் என் மீது கோபத்தில் உள்ளனர். போராட்டத்தின் பின்னணியில் காங்கிரஸ் உள்ளது. அரசியல் ரீதியில் போராட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (10)

  • DVRR - Kolkata,இந்தியா

    மிக மகிய நம்பகமான விசுவாசமான கட்சி முஸ்லிம் நேரு காங்கிரஸ் முதல் படியில் மற்ற திமுக திரிணாமுல் காங்கிரஸ் கம்ம்யூனிஸ்ட் தெலுங்கானா, ஆந்திர ஆம் ஆத்மி எல்லாம் இரண்டாம் படியால் தான் உள்ளது. யாருக்கு நம்பகம் விசுவாசம் காட்டுகின்றார்கள் இவர்கள் அயல் நாட்டில் இருந்து கொண்டு இந்தியாவின் முன்ன்னேற்றத்தை தடை செய்ய மேற்கொண்ட கட்சிகளுக்கு பணம் கொடுப்பவர்களிடம் நம்பகம் விசுவாசமாக உள்ளார்கள், இந்திய நாட்டின் மீது அதன் மக்களின் மீது அல்லவே அல்ல ஒருக்காலும் இது தான் அவர்கள் நம்பகம் விசுவாசம்

  • அப்புசாமி -

    அப்புறம் என்ன? போக்சோ கீழே கைதானவர் சொல்றாரு. எல்லோரும் நம்புங்கோ.

  • vinu - frankfurt,ஜெர்மனி

    செய்த குற்றத்தை மறைக்க அரசியல் நாடகம் போடாதே

  • GMM - KA,இந்தியா

    ஒரு பெண் தன் மீது ஒருவர் வீசும் காம பார்வையை சில நிமிடங்களில் உணர்ந்து விலகி விடுவார். தலைவர் பிஜேபி கட்சி, பாலியல் புகார். உச்ச நீதிமன்றம் விசாரணை. போலீசார் FIR. இனி குற்றம் புரிந்து இருந்தால் தண்டனை. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம்? போலீசார், வக்கீல் மனு இரு பக்க குறை நிறை கலந்து இருக்காது. ராகுல், திராவிடர்கள் விளையாட்டு பிள்ளைகள். சட்டம் பிள்ளை மீது பாயாது.? பாலியல் புகார் தவறாக பயன்படுத்தி வருவதை தடுக்க வேண்டும். நல்ல பெண்கள் தனியே படிப்பது, பயிற்சி பெறுவது, பயணிப்பது அதிகம். நல்லவர்கள் உதவி புரிய தயங்குவர்.

  • ஆரூர் ரங் -

    பல ஆயிரம் இலங்கைத் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்காளான போது சோனியா காங்கிரஸ் திமுக கூட்டணி கள்ள மவுனம். இப்போ அரசியலுக்காக விளையாட்டு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்