Load Image
Advertisement

தினமலர் நாளிதழில் செய்தி வந்தால் பாராட்டாக கருத வேண்டும்!

சென்னை: ''தினமலர் நாளிதழில் செய்தி வந்தால், அதை பாராட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என, அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

Latest Tamil News

அவர் அளித்த பேட்டி:
எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கப் போவதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வந்துள்ளதை, பாராட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். தி.மு.க., மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை தவிர்த்து, எங்கள் வேலையை பார்ப்போம்.

பா.ஜ., அண்ணாமலை பேசுவது போல், அவரது குரலில் நிறைய வீடியோக்கள் வந்துள்ளன. அவர் வெளியிடும் ஆடியோக்களும் அந்த ரகம் தான். வருமான வரித் துறை சோதனை, எப்போதும் நடப்பது தான்; இது புதிது அல்ல. ஆண்டுதோறும் வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது. யார் மேலாவது குற்றச்சாட்டு கூறியுள்ளனரா; யார் மீதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா; யாராவது தண்டிக்கப்பட்டுள்ளனரா?

Latest Tamil News
தி.மு.க.,வை யாரும் அச்சுறுத்த முடியாது. நீங்கள் பயப்படாமல் இருங்கள். பத்திரிகையாளர்களை அழைத்து, வகுப்பு நடத்துவதுபோல், ஒருவர் வகுப்பெடுத்தார். 'ஒரு கேள்வியும் கேட்கக் கூடாது. ஒரு வாரம் கழித்து வாருங்கள்' என்றாரே, அவரை பார்த்தீர்களா?

தமிழகத்தில் இருப்பதால் என்னை கேள்வி கேட்கிறீர்கள். கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை ஏற்படுத்தி உள்ளனர். இது குறித்து, அண்ணாமலையிடம் கேளுங்கள். இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.வாசகர் கருத்து (37)

 • g.s,rajan - chennai ,இந்தியா

  உதயண்ணா நல்லா நடிக்கிறாரு ....

 • Raja - chennai,இந்தியா

  உதய நிதியிடம் முதிர்ச்சியை எதிர்பார்க்க கூடாது, இவரை விட ஏழு வயது இளையவரான அண்ணாமலையிடம் இருக்கும் தெளிவு இவரிடம் இல்லை. பல திமுக மூத்த பத்திரிக்கையாளர்கள் நேரடியாகவும் , மறைமுகமாகவும் திமுக அரசின் மின் கட்டண, பேருந்து கட்டண, சொத்து வரி, பால் கட்டண உயர்வு போன்ற பகல் கொள்ளைகளையும் , பல யு டர்ன் கொள்கை முடிவுகளையும் விமர்சித்தும், மத்தியில் பலம் வாய்ந்த பாஜக வை அல்லது அண்ணாமலையை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் ஆரம்பம் முதலே எச்சரித்தும், கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் இல் மட்டும் குறியாக ஆட்சி நடத்தி இன்றைக்கு மத்திய அரசு சிபிஐ நடவடிக்கை வரை சென்றுவிட்டது. இன்னமும் பாடம் படிக்கவில்லை என்றால் கட்சி கரைந்து போய்விடும்.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  உங்க கும்பல் தினமலர் போன்ற நடுநிலையான பத்திரிக்கைகளை எந்தக் காலத்திலும் விலை கொடுத்து வாங்க முடியாது....

 • DVRR - Kolkata,இந்தியா

  ஊழல் செய்வது பொய் சொல்வது எங்கள் பிறப்புரிமை அதை ஒருக்காலும் நாங்கள் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டோம் - இப்படிக்கு திமுக அரசியல் வியாதிகள்.

 • karupanasamy - chennai,இந்தியா

  நோபிள் ஸ்டீலுள்ள டைரக்ட்டரா இரூந்தியா இல்லியா அதுக்கு பதில் சொல்லு இந்த மேட்டருல நீ கிட்டில மாட்டுன எலி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்