Load Image
Advertisement

காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கணும்: கர்நாடகாவுக்கு தமிழக அரசு கடிதம்

Stop mixing sewage in Cauvery: Tamil Nadu government letter to Karnataka  காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கணும்: கர்நாடகாவுக்கு தமிழக அரசு கடிதம்
ADVERTISEMENT
சென்னை : காவிரியில் கழிவுநீர் அதிகளவில் கலப்பதை தடுத்து நிறுத்தும்படி, அம்மாநில அரசுக்கு, தமிழக தலைமை செயலர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

காவிரியில் நடப்பு 2022 - 23ம் ஆண்டு நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த நீரளவை காட்டிலும், இது 484 டி.எம்.சி., கூடுதல். நீர் வழங்கும் தவணை காலம் முடிவதற்கு மே வரை அவகாசம் உள்ளது.

எனவே, அடுத்த ஒரு மாதத்தில் கூடுதல் நீர், தமிழகத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையே, பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது.

இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் ஆங்காங்கே பச்சை நிறத்துடன், சாக்கடை நீர் ஓடுகிறது. முறைப்படி கிடைக்கும் நீரில் பெரும் பகுதி கழிவுநீராகவே உள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள், பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 'காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்' என, அம்மாநில தலைமை செயலருக்கு, தமிழக தலைமை செயலர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

காவிரியில் கலக்கும் கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு, அதில் வலியுறுத்தி உள்ளார்.
Latest Tamil News இதுகுறித்து, தமிழக காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது: 'காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்' என, தமிழக அரசு, 2015ல் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கழிவுநீரை மறுசுழற்சி செய்வதாக, கர்நாடகா அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது; அதற்கான பணிகள் இன்னும் முடியவில்லை.

எனவே, தமிழக எல்லைக்கு வரும் காவிரி நீரை, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும், பிலிகுண்டுலு நீரளவை தளத்தில் மத்திய நீர்வள ஆணையமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கை எதிர்பார்த்து, தமிழக அரசு காத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (5)

 • ayyarsamy durairaj -

  கூவம் ஆற்றை சுத்தம் பண்ணவும்..... 2000 கோடியை ஆட்டையைப் போடவும்

 • அப்புசாமி -

  உள்ளூர் தென்பெண்ணையில் நுரை தள்ளிக்கிட்டுப்.போனா பரவாயில்லை. காவேரில நுரை தள்ளுனாத் தானே அரசியல் பண்ண முடியும்?

 • Sriniv - India,இந்தியா

  TN should realize that the neighbouring state is not going to heed their request. They consider the river as their personal property and pollute it as much as they want, before it enters TN.

 • ஆரூர் ரங் -

  அதைவிட அதிகமான கழிவுகள் முக்கியமாக சாயக் கழிவுநீர் தமிழகத்திற்குள்தான் கலக்கிறது. வாக்கு வங்கி அரசியல் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்க விடாது. நொய்யல் ஆறே பல வண்ணக் கழிவுகளின் சங்கமம். கழிவு கலந்த காவிரி நீரில் இயற்கை விவசாயம்😪 சாத்தியமேயில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்