Load Image
Advertisement

உலகமே போற்றும் பிரதமரை காங்., தலைவர்கள் மதிப்பதில்லை: அமித்ஷா குற்றச்சாட்டு

Congress leaders do not respect Prime Minister whom the world admires: Amit Shah alleges  உலகமே போற்றும் பிரதமரை காங்., தலைவர்கள் மதிப்பதில்லை: அமித்ஷா குற்றச்சாட்டு
ADVERTISEMENT
நவல்குண்ட்: உலகமே பிரதமர் மோடியை பாராட்டி, மதித்தாலும், காங்கிரஸ் தலைவர்கள் பிரதமரை மதிப்பதில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் மே 10ல் ஒரே கட்டமாக சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நவல்குண்ட் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: நமது ஒரு கையில் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், மற்றொரு கையில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., கட்சியும் இருக்கின்றன. இரட்டை இன்ஜின் அரசாங்கத்தை (பா.ஜ., ஆட்சி) முன்னெடுத்து செல்ல வேண்டுமா அல்லது ரிவர்ஸ் கியர் அரசை (காங்., ஆட்சி) மக்கள் விரும்புகிறார்களா என்பதை இந்த தேர்தல் தீர்மானிக்கும்.

Latest Tamil News
பிரதமர் மோடியை உலகமே பாராட்டி, மதிக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சித் தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா, பிரியங்கா ஆகியோர் பிரதமரை மதிப்பதில்லை. மல்லிகார்ஜூன கார்கே நமது பிரதமரை 'விஷ பாம்பு' என்றார். அவரை எந்த அளவுக்கு அவதூறு செய்கிறார்களோ, அந்தளவிற்கு அவர் ஜொலிப்பார் என்பது அவர்களுக்கு (காங்கிரஸ்) தெரியாது. பிரதமரை தவறாக பயன்படுத்தி காங்கிரசால் வெற்றி பெற முடியாது. விவசாயிகளை மதிக்காமல் அவர்கள் மீது தடியடி நடத்திய காங்கிரஸ் கட்சிக்கு நவல்குண்டில் ஓட்டுக்கேட்க உரிமையே இல்லை.

கர்நாடக மாநில விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை. ஆனால், கர்நாடக மக்களுக்காக பா.ஜ., ஏராளமான பணிகளை செய்துள்ளது. ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்த ஒருவரால் மட்டுமே ஏழைகளின் வலியை உணர முடியும். காங்கிரசார் அதனை புரிந்துக்கொள்ள மாட்டார்கள். பி.எப்.ஐ.,யை தடை செய்ததன்மூலம் மாநில மக்களுக்கு பா.ஜ., பாதுகாப்பு அளித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (6)

 • venugopal s -

  அமித்ஷாவுக்கு கூட காமெடி பண்ண நன்றாக வருகிறதே!

 • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

  ஹலோ அமிட்ஷா காமெடி பண்ணிக்காதீங்க. கேரளாவில் நரேந்திர தமோதிர தாஸுக்கு கூட்டம் கூட்டிய முறை கேரளாவே நாறுது. இதில் உலகம் போற்றும் தலைவராம் கேவலம் தனக்கு தானே புகாழாரம் சூட்டி கொள்ளவேண்டியது தான் புல் புல் பறவை ஏறி வந்த கோழை சாவர்க்கர் போல , சண்டை வேடிக்கை பார்த்த வாஜிபாயை , காந்தியை சுட்டு கொன்ற கோட்சே எல்லாம் உங்களுக்கு உலகம் போற்றும் தலைவர்கள்தான் இப்படி தானே வரலாற்றை திரிபு செய்ய முடியும்.

 • Deiva Prakash - Coimbatore,இந்தியா

  இவருடன் கல்லுரியில் படித்தவர்கள் யாரேனும் உண்டா ? இவரின் பட்டப்படிப்பு சான்றிதழ் font இவர் படித்த காலத்தில் இருந்ததே இல்லை. இவரின் digital photo அதிலும் பொய். எல்லாமே பொய்

 • INDIAN Kumar - chennai,இந்தியா

  தெரியுமா கர்ப்பூர வாசனை.

 • Kanagaraj M - Pune,இந்தியா

  காங்கிரஸ் அழிந்து வரும் கட்சிதான்...அவர்களின் பேச்சை கேட்கவேண்டும் என்ற அவசியம் யாருக்கும் இல்லை. ஈழத்தமிழர்களை ராணுவத்தை வைத்து சித்ரவதை செய்தவர்கள் அழிந்து போவார்கள். செய்த பாவத்துக்கு ஏற்கனவே சிங்கள அரசு பொருளாதாரத்தால் வீழ்ந்து போய் உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்